Monday, March 9, 2026

கிளியனுர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- விண்வெளி கருத்தரங்கம்.

கிளியனுர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- விண்வெளி கருத்தரங்கம்.


துறையூர் ஒன்றியம் கிளியனுர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். மாணவ மாணவிகள்  மற்றும் ஆசிரியர்கள்  பங்குபெற்று சிறப்பித்தார்கள்.



நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.  இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.






No comments:

Post a Comment

18 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

18 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback). நமது...