Sunday, March 1, 2026

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.


இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன், வெள்ளி, வியாழன், சனி , நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களை மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக  துறையூர் நகராட்சி பூங்காவில் (ஓங்கார குடில்) அருகில் துறையூர் சுற்றுவட்டாரத்தில் 300 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்து ஆர்வத்துடன் ஆறு கிரகங்களின் நேர்கோட்டு நிலைகளை கண்டறிந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் திரு பி ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார், இதனை துறையூர் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ செல்வங்கள் ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் செல்வதை பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். குறிப்பாக மாணவ மாணவிகள் வானோக்கு செயல்களை ஆர்வத்துடன் பார்த்து கண்டுகளித்தனர்.









No comments:

Post a Comment

நீல நிலவின் வானவியல் இயக்கம் The Celestial Mechanics of the Blue Moon #bluemoon

நீல நிலவின் வானவியல் இயக்கம் The Celestial Mechanics of the Blue Moon #bluemoon நாளைய வானியல் சிறப்பு – ப்ளூ மூன் & மைக்ரோ மூன் நாளை வான...