Sunday, August 16, 2020

ஓய்விலும் இணைந்த நண்பர்கள் - இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.

 ஓய்விலும் இணைந்த நண்பர்கள் - இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.

 

ரசிகர்களால் செல்லமாக `தல’ என்று அழைக்கப்படும் தோனியை தொடர்ந்து `சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பை செமி பைனல் போட்டியாகும். இந்தியா கடும் போராட்டத்திற்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசி வரை போராடிய தோனி, இந்த போட்டியில் ரன் அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வந்தது.

 

தோனி உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்று செய்திகள் முதலில் வந்தது. ஆனால் தோனி இன்னும் ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் அதற்குள் கொரோனா காரணமாக இந்திய அணி விளையாட வேண்டிய போட்டிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக 6 மாதமாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அவர் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் அவ்வப்போது தோனி சிரமப்பட்டார். மேலும் சில தடவை கீப்பிங்கிலும் தவறுகளை செய்தார். அதேபோல் டிஆர்எஸ் எடுப்பதிலும் தோனி சில நேரங்களில் தவறுகளை செய்தார். சில போட்டியில் இவரால் களத்தில் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்று பாதியில் வெளியேறி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிக்காக தயார் ஆகி வருகிறது. அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

 

2004 -ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். 2007 ம் ஆண்டு துவங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாக தோனி தலைமையில் இந்தியா அணி, ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான தொடர்களையும் (50 ஓவர்,டி20, சாம்பியன்ஸ் டிராபி) வென்றது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்ததும் குறிப்பிடதக்கது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து முன்னதாகவே ஓய்வை அறிவித்து விடாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய தோனி, அதன் பின்னர் சர்வதேச ஆட்டங்களில் விளையாட வில்லை. டி20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களம் காணுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.

 

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்த அறிவிப்பை தோனி வெளியிட்டு இருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தோனியின் முடிவை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.  இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.


Source By: vikatan, oneindia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...