Tuesday, August 18, 2020

ஆசிரியர் என்றால் ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாகக் கவனிக்கும்.

 ஆசிரியர் என்றால் ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாகக் கவனிக்கும்.

 

ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர். நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமையாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல, சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.

 

பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 21.  அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.” பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்.

 

ஆசிரியர் தொழிலும், அதிலுள்ள சிக்கல்களும்:


ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம். அப்போது மாணவர்கள் படித்தனர், தற்கொலை இல்லை. மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது, அதன் நோக்கம் சரியே. ஆனால் மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம், ஆனால் அவன் அடிக்க தொடங்கினான், ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம். அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் என்றீர்கள். தண்டிக்கவும் கூடாது, திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும் தண்டனையா?

 

இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா? தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவனை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா? ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க, தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா. தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார். சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.

 

மாணவர்களை தற்கொலை ஏன் இந்த துன்பத்தை சமூகம் அனுபவிக்கிறது.. காரணமே இந்த சமூகம் தான். காப்பி அடித்த மாணவர்களை பிடித்தால் தற்கொலை, தண்டனை ஆசிரியருக்கு. தவறு செய்யும் மாணவர்களை திருத்தினால் தண்டனை ஆசிரியருக்கு. ஒழுங்கான மாணவர்களை கண்டித்தால் தற்கொலை, தண்டனை ஆசிரியருக்கு. தவறு செய்யும் மாணவர்களை விட்டு விட்டு எதற்காக ஆசிரியர்கள் மீது காவல்துறையில் புகார் தருவது, கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது. அதாவது எந்தத் தவறையும் மாணவர்கள் செய்யலாம், அதற்கு உரிமை உண்டு. ஒழுங்கீனமாக மாணவர்கள் நடந்து கொள்ள உரிமை உண்டு. யார் தான் மாணவர்களை கண்டிப்பது?. தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் மாணவர்கள் சமுதாயம் தறிகெட்டு போடும் என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஊடகங்கள் தவறான தலைப்பில் செய்திகளை தருவது. தரமற்ற முறையில் விவாதம் நடத்துவது. முடிவு செய்யுங்கள்.

 

தவறுக்கு தண்டனை என்ன? யார் கண்டிப்பது?.வெறும் வாய் சொல்லில் யாரையும் திருத்த முடியாது. ஆலோசனை மூலம் திருத்த முடியாது. திருந்த வேண்டியவர்கள் யார்?. இந்த சமூகம் திருந்த வேண்டும். பெற்றோர்கள் திருந்த வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மட்டுமே குறை கூறுவது. ஆசிரியர் மீது குற்றம் சுமத்துவது. இந்த மனநிலை மாறவேண்டும். வரம்பின்றி ஆசிரியர்கள் மீது குற்றம் குறை கூறி வரும் சமுதாயம் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்து வருகிறது என்று உணருங்கள். வீட்டில் நல்வழி காட்ட தவறினால், நல்வழி காட்ட உலகத்தில் உள்ள ஒரே இடம் பள்ளிகளில் மட்டுமே இந்த இடம் உள்ளது. ஆசிரியர்களைத் தவிர வீட்டிற்கு வெளியே மாணவர்களை கண்டிக்க, தண்டிக்க உரிமை வேறு யாரும் இல்லை. இதை இந்த சமூகம் சிதைத்து விட்டு கண்ணீர் விடுவதில் எந்தப் பயனும் இல்லை என்று உணருங்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு தாருங்கள். தவறு செய்யும் மாணவர்களை மட்டுமே ஆசிரியர்கள் தண்டனை தருவார்கள். ஒவ்வொரு மாணவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே.

Source By: Kalvikural, .சீ. ராஜகோபாலன், மூத்த கல்வியாளர்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...