Friday, November 20, 2020

✍ இயற்கை வாழ்வியல் முறை🥀🥀 விளக்கெண்ணெயின் நன்மைகள்

 ✍ இயற்கை வாழ்வியல் முறை🥀🥀 விளக்கெண்ணெயின் நன்மைகள்.

🥀🥀🥀🥀🥀🥀

நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர்.


சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர். சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.

இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர்.

🥀🥀🥀🥀🥀🥀

புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட் பகுதியில் தடவும் எண்ணெயில் விளக்கெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும் எரி பொருளாகவும் பயன்படுகின்றது.

உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.

🥀🥀🥀🥀🥀🥀 

வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது.

குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது.

விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு || Castor oil beauty tips

🥀🥀🥀🥀🥀🥀

ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன. வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் 

ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும்.

🥀🥀🥀🥀🥀🥀

இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.

வித்தின் ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள் எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு, நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும்.

Pin on Face care

🥀🥀🥀🥀🥀🥀

மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய் அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது.

கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.

🥀🥀🥀🥀🥀🥀

விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.

விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். 

How to use castor oil to get rid of wrinkles | The Times of India

🥀🥀🥀🥀🥀🥀 

குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.

பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.

🥀🥀🥀🥀🥀🥀

குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி,  அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

🥀🥀🥀🥀🥀🥀

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

🥀🥀🥀🥀🥀🥀

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி,சள முதலியன குணமாகும்.

உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை அ‌ல்லது பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணையை குடி‌ப்பது அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌‌ந்த பழ‌க்கமாகு‌ம்

🥀🥀🥀🥀🥀🥀

தினமும் இரவு படுக்கைகுச் செல்லும்முன் இள வெந்நீரில் ஐந்து சொட்டு விளக்கெண்ணெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர, வலிப்பு நோய், குன்மம், குடலேற்றம், கண், காது மூக்கு, வாய் பற்றிய நோய்கள் மாயமாய் விலகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூடும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் போன்றவை குணமாகும். ஆமணக்கு எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வர தேக நிறம் பொன்போல் ஜொலிக்கும்.

🥀🥀🥀🥀🥀🥀

பிள்ளை பெற்ற பெண்களின் கருப்பை அழுக்கு வெளியேற ஆமணக்கு எண்ணெய்யை பேதி மருந்தாய்க் கொடுக்கலாம். வயிற்று வலி உள்ளவர், பிள்ளை பெற்றவர், கரு உண்டான பெண்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.


🥀🥀🥀🥀🥀🥀     

பெண்களுக்கு மார்புக் காம்புகளில் உண்டாகும் புண், வெடிப்பு போன்றவற்றுக்கு விளக்கெண்ணெய்யில் சிறிது மஞ்சள் சேர்த்துப் போட்டு வர, இரண்டே நாட்களில் ஆறிவிடும். பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தினமும் ஐந்து சொட்டு எண்ணெய்யை சாப்பிட்டு வந்தாலே போதும் வியத்தகு பலன் பெறலாம்

🥀🥀🥀🥀🥀🥀 

குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம். பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.

குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

🥀🥀🥀🥀🥀🥀

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

Know how to pick the right oil for your hair | Lifestyle News,The Indian  Express

🥀🥀🥀🥀🥀🥀

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள சளி வயிற்றுக்கடுப்பு நோயின் தன்மை குறையும்.

🥀🥀🥀🥀🥀🥀

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.

🥀🥀🥀🥀🥀🥀

உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை அ‌ல்லது பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணையை குடி‌ப்பது அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌‌ந்த பழ‌க்கமாகு‌ம்.

🥀🥀🥀🥀🥀🥀

இவையெல்லாம் உடலுக்கு உடல் மாறுபடும் என்பதால் வீட்டில் உள்ள  பெரியவர்களிடமும் அல்லது   சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.

🥀🥀🥀🥀🥀🥀

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த   ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி:  பெருசங்கர், 🚍  ஈரோடு மாவட்டம் ,பவானி

செல் நம்பர் : 6383487768

 வாட்ஸ் அப் எண் : 7598258480 

🥀🥀🥀🥀🥀🥀

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...