Thursday, February 12, 2026

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.



நாமக்கல் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ரேவதி  அவர்கள் தலைமை தாங்கி,  சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.







தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள் , ஹைராஸ்கோப், குறித்தும் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. 









நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் இணை செயலாளர் துர்கா, பொருளாளர் ரம்யா ஆகியோர் தொலைநோக்கி மூலம் தொலைதூரக் கோபுரம் மாணவிகளுக்கு காண்பித்தனர். அனைவரும் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது  மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.













No comments:

Post a Comment

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி. இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன்...