உலகின் முதல் விண்வெளி வீராங்கனை வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா பிறந்தநாள் இன்று (மார்ச் 6,1937)
சோவியத்தொன்றியத்தின்
ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்றடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும்
ஆவார். இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு
மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத்
திரும்பினார். வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா (Valentina
Vladimirovna Tereshkova) மத்திய ரஷ்யாவில் யாரோஸ்லவ் ஒப்லாஸ்ட்
பிரதேசத்தில் மார்ச் 6,1937, பிறந்தார். 1961ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத்தொன்றியத்தைச்
சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற
பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப
சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான
விண்ணப்பங்கள் குவிந்தன.
இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலண்டினா தெரேஷ்கோவா தேர்வு செய்யப்பட்டார். வாஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 சூலை 16ஆம் நாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தைச் சுற்றி 48 முறைகள், 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார். ‘சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வாலண்டினா.
நம் நிலாவின்
மறு பக்கத்தில் ஒரு மோதல் பள்ளதிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரனின்
பெயரளவில் குடியேறிய முதல் பெண்மணியும் இவர்தான். உண்மையில் விண்வெளி பயணம் அவருக்கு
மகிழ்ச்சியாக இல்லையாம். உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். இவர் எழுபதாவது
வயதில் அதிபர் புதின் மளிகையில் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில்
மத்தியில் தனக்கு செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளதாக
வெளிப்படுத்தினார்.
Source By:
Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி
பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி,
புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment