Sunday, February 28, 2021

✍🏻🫐🫐இயற்கை வாழ்வியல் முறை🫐🫐மரவள்ளிக் கிழங்கு நன்மைகள்.

✍🏻🫐🫐இயற்கை வாழ்வியல் முறை🫐🫐மரவள்ளிக் கிழங்கு நன்மைகள்.

🫐🫐🫐🫐🫐

கட்டுரையாளர் டாக்டர் சிந்த்தியா ஜெயசூரியா

🫐🫐🫐🫐🫐

மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும். ஆனாலும், இது மருத்துவ ஆய்வுகள் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இருந்தபோதும் இக்கிழங்கில் மிகைப்பட கிடைக்கும் ஒரு வைட்டமினான பி17 புற்றுநோய் நிவாரணத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றது என கூறப்படுகிறது. நான் மூத்திரப்பை புற்று நோயால் அவதிபட்டு அதிலிருந்து நிவாரணம் பெற பி17 வைட்டமினின் பயனைப் பற்றி ஆய்வு செய்தது மட்டுமின்றி மரவள்ளியை முறையாக பயன்படு்த்தி நான் நல்ல நிவாரணம் கண்டுள்ளேன். ஆனால், நான் முதலில் பல நாடுகளில் புற்றுநோய்க்கு ‘கீமோதெராப்பியை’ விரும்பாத பலர் ‘ஏப்ரிகோட்’ எனப்படும் ஒருவகை பழக்கொட்டையை சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். இந்த ஏப்ரிகோட்டைச் சாப்பிடும் மக்களை புற்றுநோய் பீடிப்பதில்லை என்பதும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள ஒன்றாகும். இதைத் தொடர்ந்து என் ஆய்வின் மூலம் ஏப்ரிகோட்டில் உள்ள அதே மருத்துவ சத்து மரவள்ளியிலும் உள்ளதென்பதை எனது ஆய்வின் மூலம் தெரிந்துகொண்டு மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். என் கதை பின்வருமாறு:

அசத்தும் மரவள்ளி கிழங்கு சாகுபடி | Dinamalar

🫐🫐🫐🫐🫐

நான் புற்றநோயால் அவதிப்பட்டதால், நான் உண்ணும் உணவு வகைகளில் பி17 வைட்டமின் உள்ள  உணவுவகைகள் குறித்து தெரிந்துகொள்ள முற்பட்டேன். இன்டர்னெட்டில் உலவி பி17 வைட்டமின் மரவள்ளியில் நிறைய இருப்பதைத் தெரிந்துகொண்டேன். பிறகு, ஒரு நாளைக்கு குறைந்தது 10 கிராம் என மூன்று வேளை மரவள்ளியைச் சாப்பிட்டுவந்தேன்.

🫐🫐🫐🫐🫐

மூத்திரப்பையில் எனக்குப் புற்றநோய் கண்டிருந்தது. ஒரு மாதகாலம் கிழங்கை உண்டு வந்தபிறகு என் மூத்திரப்பையை சோதனை செய்வதற்கு மருத்துவ நிலையம் சென்றேன். என்னை சோதித்தவர் முன்பு எனக்கு வைத்தியம் செய்த அதே சர்ஜன் ஆவார். என் மூத்திரப்பை முற்றிலும் சுத்தமாகவும் மாமூல் நிலைக்குத் திரும்பியுள்ளதையும் கண்டு அவர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். “பையோப்ஸி” செய்வதற்கு இடமில்லை” என அவர் கூறினார்.

🫐🫐🫐🫐🫐

மரவள்ளியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நான் சிறிது நலமடைந்தும் என்னைச் சுற்றியிருந்தவர்கள் நான் பார்ப்பதற்கு நலமாக இருப்பதையும் கண்டார்கள்.

🫐🫐🫐🫐🫐

மூத்திரப்பையின் சோதனை முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு என் நாட்டிலுள்ள புற்றுநோயாளிகளின் பயனுக்காக என் கதையைப் பகிரங்கமாக பிரசுரித்தேன்.

🫐🫐🫐🫐🫐

இதற்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நான் மூத்திரப் பை சோதனைகளுக்கு அதே மருத்துவரிடம் சென்று வருகிறேன் மற்றும் ஒவ்வொரு முறையும் அது சுத்தமாகவே இருக்கின்றது. நான் இதுவரை மரவள்ளியைத் தவிர மருந்து ஏதும் உட்கொண்டதில்லை.

Pasumai Vikatan - 25 December 2019 - அறு மாதங்களில் அறுவடைக்கு வரும் -  மரவள்ளி! | Pasumai: Question and Answer

🫐🫐🫐🫐🫐

இந்த பி17 வைட்டமின் எப்படி செயல்படுகிறது என்பதை சற்று எளிமையாக விளக்கிட முற்படுகிறேன். பி17 வைட்டமினின் மருத்துவப் பெயர் ‘அமிக்டலீன்/Amygdaline’ ஆகும். புற்று நோய் உயிரனுக்கள் முதிர்ச்சியடையாத அனுக்களாகும் மற்றும் சாதாரன உயிரனுக்களில் உள்ள ‘என்ஸைம்களுக்கு’ மாறாக புற்றணுக்களில் உள்ள என்ஸைம்கள் வேறுபட்ட ‘என்ஸைம்களாகும்’

🫐🫐🫐🫐🫐

பி17 வைட்டமின் சாதாரன என்ஸைம்களுடன் இணையும்போது அது 3 விதமான சர்க்கரைகளாக பிரிகின்றது, ஆனால் அது புற்றணுக்களுடன் இணையும் போது அது 1 சர்க்கரை, 1 பென்ஸால்டிஹைட் மற்றுமற் 1 ஹைட்ரோஸையனிக் அமிலமாக பிரிவுறுகிறது. என்ன நடைபெறுகின்றதென்றால் ஹைட்ரோஸையனிக் அமிலமானது உள்ளுக்குள்ளாகவே புற்றணுக்களைக் கொன்றுவிடுகிறது.

🫐🫐🫐🫐🫐

மற்றவர்களின் அனுபவங்கள்

என்னுடைய முதல் கட்டுரை பிரசுரமானதிலிருந்து புற்றுநோயால் அவதியுறும் பலர் மரவள்ளி குறித்த தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்:

🫐🫐🫐🫐🫐

திரு … புரோஸ்டேட் புற்றுநோயால் அவதியுறுபவர். அவர் மனைவி அரசாங்க பொது மருத்துவமனைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றவராவார். திருமதி … என் கட்டரையைப் படித்துவிட்டு மரவள்ளி வைத்தியத்தை செய்து பார்க்க முடிவெடுத்தார். அதற்கான காரணம், பெரியவரின் மருத்துவத்திற்கான மருந்துகளின் செலவு அவர்களின் பொருளாதார தகுதியை பெரிதும் மீறியதாக இருந்ததே ஆகும்.

🫐🫐🫐🫐🫐

ஆரம்பத்தில் அப்பெரியவர் மருத்துவநிலைய மருந்துகளை உட்கொண்ட போதிலும் அவை அவரை மேலும் நோயுறச் செய்தமையால் அவற்றை சிறிது நாள்களுக்குப் பிறகு தவிர்த்துவிட்டார். இதன் பிறகு பெரியவரின் மனைவியும் மகளும் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்தத் தீர்மானித்தனர். இதன் பிறகு பெரியவர் மரவள்ளிக்கிழங்கை பயன்படு்த்த ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர் நலமடைவதற்கான அடையாளங்கள் தோன்றின. ஒரு மாதம் சென்ற பிறகு மருத்துவநிலையம் சென்று சோதனை செய்து சோதனையின் முடிவை தமது ‘ஒன்கோலோஜிஸ்டிடம்’ கொண்டு சென்றனர்.

🫐🫐🫐🫐🫐

புற்றுநோய் கண்டறியப்பட்டபோது அவரின் PSA சோதனை முடிவுகள் 280-290 ஆக இருந்தது, ஆனால் மரவள்ளி உட்கொண்ட ஒரு மாத காலத்தில் இதே சோதனை முடிவுகள் 5.89 ஆக இறங்கியிருந்தது. இப்பெரியவர் அச்சோதனை முடிவுகளை என்னிடம் கொண்டுவந்து காண்பித்தார். இன்றும் அவர் புற்றுநோய்க்கான அடையாளங்கள் ஏதுமின்றி இருக்கின்றார் மற்றும் என்னிடம் அடிக்கடி தொடர்புகொண்டு தமது சுகத்தையும் தெரியப்படுத்திவருகிறார்.

🫐🫐🫐🫐🫐

இதே போன்று வேறு சிலரும் மரவள்ளிக்கிழங்கு வைத்தியத்தினால் தங்கள் புற்றுநோயிலிருந்து நிவாரணம் கண்டு வருகின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மருத்துவ செலவுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் என்னோடு தொடர்பு கொண்டு தங்கள் உடல்நலன் குறித்து பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

🫐🫐🫐🫐🫐

இதுவரை எந்த மருந்து உற்பத்தியாளர்களும் மரவள்ளியிலுள்ள பி17 வைட்டமின் குறித்து எந்த ஆய்வும் செய்திட முன்வரவில்லை. செய்துபார்த்தால்தான் என்ன? பொருளாதாரம் குறைவாக உள்ளவர்களுக்கு இது பேருதவியாக இருக்குமே. இருந்தபோதும் இவ்வைத்தியத்திற்காக மரவள்ளிக்கிழங்கை தேர்வு செய்யும்போது பின்வரும் ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்:

வளர்ச்சியும் இல்லை; விற்கவும் முடியவில்லை - மரவள்ளி கிழங்கு விவசாயிகள்  வேதனை | Tapioca tuber farmers worry about them farming | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil News ...

🫐🫐🫐🫐🫐

மரவள்ளி அப்போதுதான் அறுவடை செய்யப்பட்டிருக்கவேண்டும்.

கிழங்கை வேகவைக்கும்போது பாத்திரம் மூடப்படாமல் இருக்க வேண்டும். இது கிழங்கில் உள்ள சில வஸ்துக்கள் ஆவியாக வெளிப்பட உதவும்.

கிழங்கை அதிக நீர் ஊற்றி வேகவைக்கவேண்டும். வெந்தவுடன் அதிகப்பட்ட நீரை வடித்துவிடவேண்டும்.

🫐🫐🫐🫐🫐 

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு குறைந்தது எட்டு மணிநேரத்திற்கு சுக்கு அல்லது இஞ்சி சேர்ந்த எந்த பொருளையும் உட்கொள்ளப்படக்கூடாது.

🫐🫐🫐🫐🫐

மரவள்ளிக் கிழங்கின் மற்ற பயன்களை கீழே பார்ப்போம்

🫐🫐🫐🫐🫐

மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்C சத்து மிகுந்துள்ளது.

🫐🫐🫐🫐🫐

கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் மரவள்ளிக்கிழங்கும் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்றால், அது மிகையில்லை.

🫐🫐🫐🫐🫐

மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம், அல்லது கூட்டு, பொரியலாக செய்யலாம். அதன் அற்புதத்தை இப்போது பார்க்கலாம்.

🫐🫐🫐🫐🫐

உணவுத்துறையில் மரவள்ளிக்கிழங்கு

அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.

கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது.

🫐🫐🫐🫐🫐

தற்காலத்தில் நாற்பது வயதை அடையுமுன்னரே, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புகளின் வலிமை குறைந்துவிடுகிறது, இதனால் கை கால் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படுகிறது. பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.

🫐🫐🫐🫐🫐

ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும், உடலில் நீரின் அளவை, சரியாக்கும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.

🫐🫐🫐🫐🫐

இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

🫐🫐🫐🫐🫐

வயிற்றுப்புண் தீர, மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாராகும் ஜவ்வரிசியை நீர் விட்டு கொதிக்க வைத்து, கஞ்சி போல சில வேளைகள் பருகிவர, அவை குணமாகும்.

ஜவ்வரிசி நீரை மோரில் உப்பு கலந்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டான வயிற்று வலி குணமாகும், உடலுக்கு ஆற்றல் உண்டாகும்.

🫐🫐🫐🫐🫐

மரவள்ளிக்கிழங்கு மாவில் கஞ்சி செய்து, பால், பனை வெல்லம் கலந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிட, உடலுக்கு வளமாகும்.

உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி || Decline in cassava  prices due to increase in production

🫐🫐🫐🫐🫐

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🫐🫐🫐🫐🫐

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚   

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.

🫐🫐🫐🫐🫐

(( செல் நம்பர்)) 7598258480, 6383487768

((வாட்ஸ் அப்))  7598258480

🫐🫐🫐🫐🫐

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...