வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். இது பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன. இறுதிக்கட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment