Tuesday, April 27, 2021

வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 27, 1883).

வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 27, 1883). 

ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே (Edouard Albert Roche) அக்டோபர் 17, 1820ல் மோண்ட்பெல்லியர் பிரெஞ்சில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, 1844ல் தனறிவியல் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். பிறகு அங்கேயே 1849ல் அறிவியல் புலத்தில் பேராசிரியர் ஆனார். இவர் பியேர் சைமொன் இலாப்லாசின் ஒண்முகில் கருதுகோளைக் கணிதவியாகப் பகுப்பாய்வு செய்தார். இம்முடிவுகளை 1847 வரை பல ஆய்வுக் கட்டுரைகளாகத் தான் பணியில் சேர்ந்த்தில் இருந்து மோண்ட்பெல்லியர் கல்விக்கழகத்துக்கு அனுப்பினார். இவற்றில் மிக முதன்மையானவை இவர் எழுதிய வால்வெள்ளி(1860), ஒண்முகில் கருதுகோள்(1873) பற்றியவையாகும். இவரது ஆய்வுகள் துகள் சூறைகளின் பாலான வலிய ஈர்ப்பின் விளைவுகளை ஓர்ந்து பார்த்தன. 

ஆல்பெர்த் ரோச்சே காரிக்கோளின் வலயங்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாட்டுக்காகப் பெயர்பெற்றவர். இவர் இயல்பான நிலாவொன்று காரிக்கொளை நெருங்கும்போது ஈர்ப்பு அலைகளால் அந்நிலா தனித்தனிப் பகுதிகளாகப் பிரிந்து அதன் வலயங்கள் ஆகின என்றார். ஈர்ப்பால் கட்டுண்ட இரு பொருள்கள் ஓதவிசைகளால் பிரிவதற்கான தொலைவை கணக்கிட்டார்.  இந்தத் தொலைவு ரோச்சே வரம்பு எனப்படுகிறது. இவரது பிற ஆய்வுகளும் வட்டணை இயக்கவியலைச் சார்ந்தவையாகும். இரு பொருள்களிடையே வட்டணையில் சுற்றிவரும் ஒரு பொருள் அதில் ஒன்றால் கைப்பற்ரப்படு வரம்புகளின் இருப்புவரையே ரோச்சே இதழ் என வழங்குகிறது. மற்றொரு பெரிய வான்பொருளைச் சுற்றிவரும் சிறிய வான்பொருளின் தக்கம் விளைவிக்கும் ஈர்ப்புக் கோளமே ரோச்சே கோளம் என வழங்குகிறது.

 Lens Flare Animation - Free Overlay Stock Footage GIF | Gfycat


ஆல்பெர்த் ரோச்சே ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வான்கோள இயக்கவியல் ஆய்வுக்காகப் பெயர் பெற்றவர். இவரது நினைவாக, ரோச்சே கோளம், ரோச்சே வரம்பு, ரோச்செ இதழ் ஆகிய அறிவியல் கருத்துப் படிமங்கள் குறிக்கப்படுகின்றன. இவர் வானிலையியல் நூலாசிரியரும் ஆவார். ஆல்பெர்த் ரோச்சே ஏப்ரல் 27, 1883ல்  தனது 62வது அகவையில் பிரெஞ்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...