Saturday, June 26, 2021

✍🏻👒👒இயற்கை வாழ்வியல் முறை👒👒தாழம்பூ நன்மைகள்.

 ✍🏻👒👒இயற்கை வாழ்வியல் முறை👒👒தாழம்பூ நன்மைகள். 

 👒👒👒👒👒👒  

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும்  சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே  கொண்டுள்ளதுதாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.  

👒👒👒👒👒👒

உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த  ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

👒👒👒👒👒👒

பசியை தூண்டக்கூடியது

என்னமோ தெரியல பசியே எடுக்கமாட்டேங்குது ஏதோ நேரத்திற்கு சாப்பிடுகிறேன் என்று சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இவர்கள் உடல்  நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப்படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் 1ஸ்பூன் அளவு  பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

👒👒👒👒👒👒

உணவின் மாறுபாட்டாலும் நேரம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெருமலை  உண்டாக்குகிறதுஇதை போக்க இதை நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பெருமல் குணமாகும்.

 👒👒👒👒👒👒

உடல் சூடானால் வெப்ப நோய்கலின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை  நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி  அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். அல்லது பூவை மணப்பாகு செய்து குடித்து வந்தால் உடல்சூடு குணமாகும்.

👒👒👒👒👒👒

தாழம்பூவை  சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.

நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

👒👒👒👒👒👒

இவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை  தடுக்கலாம்.

   தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.

👒👒👒👒👒👒

உடலில் அதிக அளவு உஷ்ணம் உள்ளவர்கள் தாழம்பூவை சாப்பிட்டு வர வேண்டும். சிறிதளவு தாழம்பூ இலையை எடுத்து கொள்ள வேண்டும். பின்பு தாலம்பூ இலையை நன்றாக நெய்யில் வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு தாழம்பூ இலையை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள நீர் கடுப்பு குணமாகும். இதனால் நீர்க்கடுப்பு தாழம்பு இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரலாம். நீர் கடுப்பு உள்ளவர்கள் தொடர்ந்து தாழம்பூவை சாப்பிட்டு வர வேண்டும்.

👒👒👒👒👒👒

தாழம்பூ இலையை சாப்பிட்டு வருவதால் நீர்சுருக்கு ஏற்படாது. இதனால் நீர் சுருக்கு ஏற்படாமல் இருக்க தாழம்பூவை இலையை சாப்பிட்டு வரலாம்.

👒👒👒👒👒👒

 நீர்சுருக்கு அதிக அளவில் உள்ளவர்கள் தினமும் தாலம்பூ இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர வேண்டும்.

👒👒👒👒👒👒

 தாழம்பூவை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். பின்பு வெட்டிய தாழம் பூவை எடுத்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்தத் தண்ணீரை குடித்துவர வேண்டும். இதனால் உடலிலுள்ள தோல் நோய்கள் எல்லாம் குணமாகும்.

👒👒👒👒👒👒

தோல் நோய்கள் குணமாக தொடர்ந்து தாழம்பூவை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வரலாம்.   இதனால் சொறி சிரங்கு விரைவில் குணமாகும்.

👒👒👒👒👒👒

 தாழம்பூவை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வருவதால் பித்த நோய் ஏற்படாது. இதனால் பித்த நோய் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து தாழம்பூவே கொதிக்க வைத்து தண்ணீரை குடித்து வரலாம்.

👒👒👒👒👒👒

 பித்த நோய் உள்ளவர்கள் தினமும் தலம்பூவே கொதிக்க வைத்து குடித்து வர வேண்டும்.  தாழம்பூவை கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதால் வெயில் காலங்களில் ஏற்படும் அம்மை நோய் ஏற்படாது. இதனால் உடலில் அம்மை நோய் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து தாழம் பூவை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வரலாம்.

அழிந்து வரும் தாழை மரம் | Heritage Vembaru

👒👒👒👒👒

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...