Sunday, June 27, 2021

நாசாவின் ஆறுக்கும் மேற்பட்ட கோளாய்வுத் திட்டங்களில் (நிலா, செவ்வாய், புதன்), பங்கேற்ற மரியா டி. சூபெர் பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1958).

நாசாவின் ஆறுக்கும் மேற்பட்ட கோளாய்வுத் திட்டங்களில் (நிலா, செவ்வாய், புதன்), பங்கேற்ற மரியா டி. சூபெர் பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1958).

மரியா டி. சூபெர் (Maria D. Zuber) ஜூன் 27, 1958ல் பென்சில்வேனியா, அமெரிக்காவில் பிறந்தார். பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் புவியியலிலும் இளவல் பட்டம் பெற்றார். மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழத்தில் பணிபுரிந்தார். அப்போது மேரிலாந்தில் இருந்த நாசாவின் கோடார்டு விண்வெளி பறத்தல் மையத்தில் ஆய்வு அறிவியலாளராகவும் இருந்துள்ளார். இவர் 1998ல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். அங்கு 2003 முதல் 2012 வரை புவி, வளிமண்டலம், கோளியல் துறையின் தலைவராக இருந்துள்ளார். சூபரின் தொழில்முறைப் பணி சூரிய மண்டலக் கோள்களின் கட்டமைப்பிலும் கண்டத்தட்டு ஆய்விலும் குவிந்திருந்தது. இவர் ஈர்ப்பையும் ஒருங்கொளி குத்துயர அளப்பையும் பயன்படுத்தி கோள்களின் உட்கட்டமைப்பையும் அவற்றின் படிமலர்ச்சியையும் ஆய்ந்தார். 

சூபெர் பத்து நாசா கோளாய்வுத் திட்டங்களில் குழுவுறுப்பினராக இருந்துள்ளார். இவற்றில் செவ்வாய்க் கோளக அளக்கை, டான் திட்டம், மெசஞ்சர் (MESSENGER) ஆகியவையும் அடங்கும். சூபரின் ஆர்வம் கோளியலில் இளமை முதலே கவிந்திருந்தது. இந்த ஆர்வத்துக்கு உரமூட்டவே இவர் முந்தைய விண்வெளி வலவரான சால்லி இரைடுடன் இணையச் செய்தது. இதனால் இளம் மாணவரைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள் ஆய்வகத் திட்டத்தின் (GRAIL) உறுப்புகள் ஆய்வில் ஈடுபடவைத்தது. எப், ஃபுலோ எனும் இரண்டு விண்கலங்களின் கோளாய்வுத் திட்டத்துக்கு மாணவர்களுக்குப் போட்டி வைத்து பெயர்கள் பெறப்பட்டன. மேலும் இந்த இடைநிலைப்பள்ளி மாணவர்கள் GRAIL திட்டத்தின் மூன்காம் கருவியைப் பயன்படுத்திப் பெறப்பட்ட நிலா பற்றிய அறிவைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

 GRAIL - Wikipedia

Moon - Wikiwand

சூபர் கீழ்வரும் தொழில்சார் கழகங்களில் ஆய்வு உறுப்பினர் ஆவார். அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியம், அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம், அமெரிக்க வானியல் கழகம், கோளியல் பிரிவு, அமெரிக்க விண்வலவர் கழகம் மற்றும் அமெரிக்கப் புவியியல் கழகம். சூபர் நாசாவின் தகவுறு பொது சேவைப் பதக்கத்தை 2004ல் பெற்றார். இவர் 2008ல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டின் இறுதியில் அமெரிக்கச் செய்திகள் மற்றும் உலக அறிக்கை இதழால் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் பேராசிரியரான ஃபியோனா ஃஃஆரிசன் உடன் இணைந்து உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். சூபரும் ஆரிசனும் நாசாவின் எந்திரன் இலக்கியக்கத் திட்டங்களுக்காக முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இரண்டு பெண்மணிகள் ஆவர். 


Dawn finds possible ancient ocean remnants at Ceres

சூபர் தேசிய அறிவியல் குழும உறுப்பினர். மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுத் துனைத் தலைவரும் ஆவார். இங்கு இவர் புவி, வளிமண்டலம், கோளியல் துறையில் ஈ.ஏ. கிரிசுவோல்டு புவி இயற்பியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். சூபர் நாசாவின் ஆறுக்கும் மேற்பட்ட கோளாய்வுத் திட்டங்களில், குறிப்பாக நிலா, செவ்வாய், புதன் கோள், பிற பல சிறுகோளாய்வுத் திட்டங்களில் அவற்றின் நிலவரைப் பணிகளில் பங்கேற்றார். அண்மையில் இவர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகம் ஆளுகை செய்யும் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள் ஆய்வகத் திட்ட்த்தில் முதன்மை ஆய்வாலராகப் பணிபுரிகிறார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...