Tuesday, August 3, 2021

✍🏻🔳🔳இயற்கை வாழ்வியல் முறை🔳🔳மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்.

✍🏻🔳🔳இயற்கை வாழ்வியல் முறை🔳🔳மூட்டு வலி நீங்க  பாட்டி வைத்தியம்.

🔳🔳🔳🔳🔳

இன்று 50 வயதை கடந்த பெரும்பாலானோருக்கு மூட்டு வலி என்பது மிக சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் ஆகி விட்டது. எலும்பு தேய்மானமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முற்காலத்தை போல அல்லாமல் நமது உணவு பழக்கத்தில் இப்போது பல மாறுதல்கள் உள்ளதாலேயே இது போன்ற நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. பாட்டி வைத்தியத்தின் மூலம் மூட்டு வலியில் இருந்து விடுபட சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

🔳🔳🔳🔳🔳

சிறிதளவு கறுப்பு எள்ளை கால் டம்பளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.

🔳🔳🔳🔳🔳

மூட்டு வலி உடனடியாக குறைய தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து பின் வெதுவெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்தால் உடனே வலி குறையும்.

🔳🔳🔳🔳🔳

எலுமிச்சை சாறு விட்டு சுக்கை நன்கு அரைத்து அதில் பத்து போட்டால் மூட்டு வலி குறையும்.

🔳🔳🔳🔳🔳

வேப்பம் பூ, வாகைப் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை உலர்த்தி பின் பொடி செய்து அரை ஸ்பூன் உண்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

🔳🔳🔳🔳🔳

கடுகு, சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து சூடு படுத்தி பின் அதில் சிறிது கற்பூரம் கலந்து வெது வெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை குறையும்.

🔳🔳🔳🔳🔳

நல்ல நடுதரமான உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

🔳🔳🔳🔳🔳

ஒரு தேக்கரண்டி குதிரைமசால் (இது ஒரு கால் நடை தீவனம்) இந்த விதையை ஒரு கோபை நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை தேநீர் போல் அருந்திவர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலி  குணமாகும்.

 🔳🔳🔳🔳🔳

இரண்டு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் அடுப்பில் நன்கு சூட வைத்து பின் ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் அந்த எண்ணெயை கலந்து தினமும் காலை சாப்பிடும் முன் குடிக்க வேண்டும். இவ்வாறு மூட்டு வலி குணமாகும்  வரை குடிக்க வேண்டும். குறிப்பாக அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் புளிப்பான உணவுகளை சாப்பிடக் கூடாது.

🔳🔳🔳🔳🔳

ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்

🔳🔳🔳🔳🔳

கொள்ளுப்பயறு சிறந்த இயற்கை உணவு. கொள்ளு பருப்பில் ரசம் வைத்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தில் மூன்று முறை இதை எடுத்துக் கொள்ளலாம்நரம்பு பிடிப்பால் ஏற்படும் மூட்டு வலியை, முருங்கையும்முடக்கற்றான் கீரையும் சரி செய்யும். எண்ணெய் இல்லாத உணவுகள், எவ்வித மூட்டு வலியையும் போக்கும். வெள்ளைப்பூண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை விரட்டும்

உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.


🔳🔳🔳🔳🔳

வாழைப்பழம் அதிகம் சாப்பிட வேண்டும் காய்கறி சூப் அதிகம் சாப்பிட வேண்டும் கேரட் பீட்ரூட் போன்றவை பச்சையாக சாப்பிடலாம்.

🔳🔳🔳🔳🔳

தவிர்க்கவேண்டியவை காரமான வறுத்த உணவுகள்  டீ காபி பகல் தூக்கம் மனக்கவலைகள்.

                         

🔳🔳🔳🔳🔳 

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...