Tuesday, August 24, 2021

✍🏻🪴🪴இயற்கை வாழ்வியல் முறை🪴🪴மகிழம் பூவின் நன்மைகள்.

✍🏻🪴🪴இயற்கை வாழ்வியல் முறை🪴🪴மகிழம் பூவின் நன்மைகள்.

🪴🪴🪴🪴🪴

மகிழ மரத்தின் காய், பழம், இலை, பூ, பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இவை குறித்தான சித்த மருத்துவ குறிப்புகள் அதிகம் கிடைக்கிறது.

🪴🪴🪴🪴🪴

மகிழம் பழம் நல்ல வாசனையாக இருக்கும் சாப்பிட சுவையாக இருக்கும் மகிழம் பழம் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி குறையும். தசைகளின் இறுக்கம் கொஞ்சம் தளர்வதால் தலைவலி நீங்குவதோடு நல்ல தூக்கம் வரும். அத்துடன் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவையும் நீங்கும். ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிடலாம்.

🪴🪴🪴🪴🪴

மகிழம்பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

🪴🪴🪴🪴🪴

மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.

🪴🪴🪴🪴🪴

மகிழம்பட்டையை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளர் அளவுக்கு குறையும் (வற்றும்) வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக கருப்பை பலப்படும். இந்த கஷாயம் பருக காய்ச்சலும் குறையும். மகிழம் மரத்தின் பாகங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உடையவை.

அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர பாத வெடிப்புகள் குறையும். தோல் வறட்சிக்கும் இப்படி செய்து வர தோலில் உண்டாகும் வறட்சி நீங்கும். கருவேலம்பட்டை போல் மகிழம் பட்டைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது. மகிழம் பட்டைகளை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வர வாய்ப்புண் குறையும்.

🪴🪴🪴🪴🪴 

மகிழம் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய நீரை கொண்டு உடலை துடைக்க உடல் வெப்பம் குறைந்து காய்ச்சல் குறையும். மகிழம் இலைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது.

🪴🪴🪴🪴🪴

மகிழம் விதைகளை காய வைத்து பொடி செய்து சிறிதளவு (ஒரு கிராம்) எடுத்து தண்ணீரில் கொதிக்க விட்டு கல்கண்டு மற்றும் பால் சேர்த்து குடித்து வர உடல் வலிமை பெறும். உடல் அழகு பெறும். ஆண்மையும் பெருகும். மகிழம் விதைகளை பாலில் அரைத்தும் சாப்பிடலாம். தாது விருத்தி அதிகரிக்கும். அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

🪴🪴🪴🪴🪴

​பல் கோளாறுகளை குணப்படுத்தும்

மகிழமரத்தின் இலைகளை கொண்டு வந்து பொடியாக நறுக்கி கைப்பிடியளவு எடுத்து ஒரு சொம்பு நீர் விட்டு கொதிக்க விடவும். இவை நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவைத்து இளஞ்சூட்டில் இருக்கும் போது வடிகட்டி வாய் கொப்புளிக்க வேண்டும்

இந்த நீரை பற்கள் முழுவதும் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வாய் கொப்புளிக்க வேண்டும். இந்த இலையை அப்படியே வைத்திருந்து மாலை நேரத்திலும் அப்படியே கொதிக்க விட்டு பல்களில் வைத்திருந்து கொப்புளித்து எடுக்கவும் அப்படி செய்தால் நாள்பட்ட பல் வலி பல் சொத்தை, சொத்தை புழு போன்றவை சரியாகும். மகிழம்பூக்களையும் கஷாயமாக்கி வாய் கொப்புளித்து வரலாம்.

ஒருவாரம் செய்து வந்தால் பல் வலி கோளாறுகள் குணமாகும். பல் ஆடுபவர்கள் அதிசயமாக பல் ஆட்டம் நிற்பதை காண்பார்கள்.

🪴🪴🪴🪴🪴

கருவை எதிர்நோக்கும் பெண் மகிழமரத்தின் பட்டையை கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி 10 கிராம் அளவு மகிழமர பட்டை எடுத்து அரை லிட்டர் நீர் விட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.

இதை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் பலவீனமான கருப்பைக்கும் பலம் கிடைக்கும். கருத்தரிக்க செய்வதோடு கருவையும் பாதுகாக்கும். குழந்தை பிறப்பையும் சுகமாக்கும்.

🪴🪴🪴🪴🪴

ஆறாத புண்கள். கட்டிகள் இருக்கும் போது மகிழமர பட்டைகளை பொடித்து அந்த இடத்தில் தடவி பற்று போட்டு வந்தால் புண் ஆறும். மூட்டு வலி வீக்கம் அதிகமாக இருக்கும் போது மகிழமரத்தின் வேரை வினிகரில் கலந்து வீக்கம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.மூட்டு வலிக்களுக்கு மகிழமரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுத்தலாம்.

🪴🪴🪴🪴🪴

மகிழமரத்தை மருத்துவ சிகிச்சைகாக பயன்படுத்தும் போது சரியான அளவு பயன்படுத்தும் விதம், தயாரிக்கும் முறை என அனைத்தையும் மருத்துவரை அணுகி அறிந்துகொண்டால் அது நிச்சயம் பலனளிக்கும்.

🪴🪴🪴🪴🪴

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...