Friday, November 19, 2021

✍🏻🧲🧲இயற்கை வாழ்வியல் முறை🧲🧲முகப்பரு வர காரணங்களும் தீர்வுகளும்.

✍🏻🧲🧲இயற்கை வாழ்வியல் முறை🧲🧲முகப்பரு வர காரணங்களும் தீர்வுகளும்.

🧲🧲🧲🧲🧲🧲

இன்றைய இளம் தலைமுறையினர் உடல்ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுவதால், கண்ட கண்ட கிரீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதற்கான தீர்வுகளை பார்ப்போம்:

🧲🧲🧲🧲🧲🧲

காரணங்கள்

சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும்.

காபி மற்றும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

உண்ணும் உணவு சரியில்லை   நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது  பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் கவனம் செலுத்த வேண்டும்.

🧲🧲🧲🧲🧲🧲

பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.

அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கும் கிரீன் டீ, காய்கறிகள், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, கருநீலக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.

🧲🧲🧲🧲🧲🧲

இனி முகப்பரு சரியாக இயற்கை வழிமுறைகளைப் பார்ப்போம் 

🧲🧲🧲🧲🧲🧲

வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புகளில் இருந்து விடுபடலாம்.

சிறந்த மருந்தாக பயன்படும் தேனும் பருக்களுக்குரிய மருந்து தான். பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.

🧲🧲🧲🧲🧲🧲

கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.

🧲🧲🧲🧲🧲🧲

தலைவலிக்கு நாம் செய்யும் பழக்கம் தான் ஆவிபிடிப்பது. இதனை பருக்களை போக்கவும் செய்யலாம். ஆம், நம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்களை போக்க ஆவிப்பிடிப்பதும் முக்கிய ஒன்று. ஆவிப்பிடித்தால் முகத்துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்களை குணப்படுத்தலாம்.

🧲🧲🧲🧲🧲🧲

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஆவிப்பிடித்தால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்

🧲🧲🧲🧲🧲🧲

திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும். 

🧲🧲🧲🧲🧲🧲

பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும். 

🧲🧲🧲🧲🧲🧲

50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும். 

🧲🧲🧲🧲🧲🧲

அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும். 

🧲🧲🧲🧲🧲🧲

வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும். 

🧲🧲🧲🧲🧲🧲

வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். 

🧲🧲🧲🧲🧲🧲

மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும். 

🧲🧲🧲🧲🧲🧲

பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும். 

🧲🧲🧲🧲🧲🧲

எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும். சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் எலுமிச்சைச் சாறு நீக்கும். 

🧲🧲🧲🧲🧲🧲

இந்த முறைகளைப் பின்பற்றினால் முகப்பருக்கள் நீங்கிப் பொலிவுடன் வலம் வரலாம்.

🧲🧲🧲🧲🧲🧲

சாதிக்காயை அரைத்து சந்தனம் சேர்த்து இரவில் பூசி காலையில் கழுவிவர முகப்பருக்கள் மறைந்து,முகம் பொலிவுறும்

தயிரின் மேல்படியும் பாலாடையுடன், மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து, இரவில்பூசி, காலை சீயக்காய்தூள் கொண்டு முகம் கழுவ கரும்புள்ளிகள் மறைந்து, பளபளக்கும்

 சீரகத்தை எருமைப்பாலிரைத்துப் பூச முகப்பரு மறையும்.

🧲🧲🧲🧲🧲🧲

பாசிப்பயரை அரைத்து, பாலில் குழைத்து,சிறிது எலுமிச்சைசாறு,திரிகடி மஞ்.தூள் கலந்து பூசி, 1மணி ஊறவைத்திளம் சூடான நீரில் கழுவிவர முகப்பரு மறையும்.

🧲🧲🧲🧲🧲🧲 

சந்தனம், மஞ்சள் இளநீரிலரைத்துப்பூசி, 1மணிநேரம் கழித்து கழுவ முகம் பொலிவுறும்.

🧲🧲🧲🧲🧲🧲  

துளசியிலை, மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசிவர கரும்புள்ளிகள் மறையும்.

🧲🧲🧲🧲🧲🧲 

பப்பாளிப்பழத்தை குழைத்து பூசி, 20நிமி.ஊறவைத்துக்கழுவ கரும்புள்ளிகள் நீங்கும்.

🧲🧲🧲🧲🧲🧲

சாதிக்காயை அரைத்து சந்தனம் சேர்த்து இரவில் பூசி காலையில் கழுவிவர முகப்பருக்கள் மறைந்து, முகம் பொலிவுறும்.

🧲🧲🧲🧲🧲🧲

தயிரின் மேல்படியும் பாலாடையுடன்,மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து,இரவில்பூசி, காலை சீயக்காய்தூள் கொண்டு முகம் கழுவ கரும்புள்ளிகள் மறைந்து, பளபளக்கும்

🧲🧲🧲🧲🧲🧲

  சீரகத்தை எருமைப்பாலிரைத்துப் பூச முகப்பரு மறையும்.

🧲🧲🧲🧲🧲🧲

🌷🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...