Sunday, November 21, 2021

✍🏻🐼🐼இயற்கை வாழ்வியல் முறை 🐼🐼வேலிப்பருத்தியின் நன்மைகள்.

✍🏻🐼🐼இயற்கை வாழ்வியல் முறை 🐼🐼வேலிப்பருத்தியின்  நன்மைகள்.

🐼🐼🐼🐼🐼

கட்டுரை: மூலிகை மருத்துவ வல்லுனர், 'அல்மா' வேலாயுதம்:

🐼🐼🐼🐼🐼

கொரோனா போன்ற பல வைரஸ் நோய்களுக்கு காரணம், சுவாசக் கோளாறே. இந்தப் பிரச்னையை தீர்க்கும் அற்புத மூலிகையான, வேலி பருத்தி பற்றி,  துாதுவளை, துளசி, கண்டங்கத்திரி, ஆடாதொடை, முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, இம்பூரல் என, பல மூலிகைகள், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றன.

🐼🐼🐼🐼🐼

எனினும், சித்தர்களால், 'உத்தாமணி' என அழைக்கப்படும், வேலி பருத்திக்கு, சுவாசக் கோளாறை தீர்க்கும் குணம் அதிகமாக உள்ளது. சாதாரணமாக, வேலிகளில் படர்ந்திருக்கும் இந்த தாவரத்தின் இலை, இதய வடிவில் இருக்கும்; இரட்டை காய்களையும் கொண்டிருக்கும். அந்த காய்கள் வெடித்தால், பஞ்சு போல வெளியே வரும். அதனால் தான், இதை, வேலி பருத்தி என்கின்றனர். சீந்தில் என்ற மூலிகையும், வேலி பருத்தி போலவே இருக்கும். இலையை காம்புடன் கிள்ளினால், பால் போல திரவம் வடிந்தால், வேலி பருத்தி; தண்ணீர் போல திரவம் வந்தால், சீந்தில் என, முடிவு செய்யலாம். வேலி பருத்தியின் இலையும், வேரும் மருத்துவக் குணம் கொண்டவை.

🐼🐼🐼🐼🐼

சுவாசக் கோளாறுடன், வயிற்றுப் பிரச்னை, வயிற்று வலி, குளிர் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற பிரச்னைகளையும், இது போக்கும். இதன் இலையை பறித்து, இடித்து, சாறு பிழிந்து, தினமும், காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சுவாசப் பிரச்னை தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும். இந்த செடியின் இலையை அரைத்து, லேசாக சுட வைத்து, ஆறியதும், அதில் தேன் கலந்து சாப்பிட, காசநோய் கூட காணாமல் போகும். இதன் இலை மூன்றை பறித்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும், வடிகட்டி, வாரம் ஒரு முறை குடித்து வந்தால், குழந்தைகளுக்கு சளித் தொல்லை தீரும்.மேலும், உடல் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி இருந்தால், வேலி பருத்தி இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி, மெல்லிய துணியில் கட்டி, ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும்.வேலி பருத்தியை, குழம்பாக வைத்தும் சாப்பிடலாம்.

🐼🐼🐼🐼🐼

ஒரு கைப்பிடி வேலி பருத்தியுடன், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அரைத்து, புளி சேர்த்து, குழம்பாக வைத்து, சாதத்திற்கு ஊற்றி சாப்பிடலாம். சற்று கசப்பு சுவையுடன் இருக்கும்.அதுபோல, துவையலாகவும் இதை சாப்பிடலாம். மிளகாய் வற்றல், புளி, உப்பு வைத்து அரைத்து, அதை சாதத்தில் போட்டும், தொட்டும் சாப்பிடலாம்.வேலி பருத்தி சாறுடன், மிளகு சேர்த்து, நாள் முழுதும் ஊறவைத்து, அந்த மிளகை காய வைத்து, தினமும், ஒரு மிளகு சாப்பிட, மூச்சிறைப்பு நோய் குணமாகும்.

🐼🐼🐼🐼🐼

வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் இருக்கும்  யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.

 🐼🐼🐼🐼🐼

5 கிராம் அலவு வெலிப்பருத்து வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை  போகும்.

🐼🐼🐼🐼🐼

இதன் வேரை உலர்த்தி தூள் செய்து 2 சிட்டிகை அளவுவரை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளின் வாயு நீங்கி பேதியாகும். பேதியுடன் பூச்சி, கிருமிகள்  நீங்கும். வேலிப்பருத்தி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல்வாதம், முடக்கு வாதம், வாத குடைச்சல், இடுப்பு வலி முதலியன  குணமாகும்

🐼🐼🐼🐼🐼

குழந்தைகளுக்கு நுரையீரலில் கபம் அதிகரித்து சுவாசம் மிகுந்திருந்தால் வேலிப்பருத்தி இலையையும், துளசியும் சேர்த்து அதனுடன் கல் உப்பு ஒன்று சேர்த்து நன்றாக கசக்கி பிழிந்தெடுத்த சாற்றில் 1 தேக்கரண்டி அளவு கொடுக்க சிறிது நேரத்தில் கபம் வெளியாகும்

வேலிப்பருத்தி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல்வாதம், முடக்கு வாதம், வாத குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.

வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும். தொடக்கநிலையில் இருக்கும் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.

5 கிராம் அளவு வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

வெளிப்பருத்தியின் வேரை உலர்த்தி தூள் செய்து 2 சிட்டிகை அளவு வரை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளின் வாயு நீங்கி பேதியாகும். பேதியுடன் பூச்சி, கிருமிகள் நீங்கும்

🐼🐼🐼🐼🐼

தக்க வயதை அடைந்த பெண் ருதுவாகாவிட்டால் விட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உண்டு கொண்டுவர ருது ஆகாத பெண்கள் ருது ஆவார்கள்.


🐼🐼🐼🐼🐼

பின்குறிப்பு 

 மருத்துவர் ஆலோசனைப்படி, இவற்றை தயார் செய்து பயன்படுத்தவும்

🐼🐼🐼🐼🐼

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...