Sunday, August 23, 2026

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய விண்வெளி தினம்.

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய  விண்வெளி தினம்.



நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் புவுன்டேஷன் மாணவர்கள் பயிற்சி மையத்தில் தேசிய  விண்வெளி தின கருத்தரங்கம் 23.08.26ல் நடைபெற்றது. தொடக்கத்தில் நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் தலைவர் முனைவர் ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார். அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முனைவர் சக்தி பிரியா மற்றும் திரு  விஜய் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். 


இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். 


 இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள செல்போன் டவர், மரம் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக கண்டு மகிழ்ந்தனர்.

 

No comments:

Post a Comment

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய விண்வெளி தினம்.

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய  விண்வெளி தினம். நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் புவுன்டேஷன் மாணவர்கள...