Tuesday, December 14, 2021

இரண்டு லட்சம் பரிசு - பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவிப்பு.

இரண்டு லட்சம் பரிசு - பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவிப்பு.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரைப் போட்டியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

பாரதியார் பிறந்தநாள் விழா, நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பு கட்டுரைப் போட்டியை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில், “பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள் ‘இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு’ என்ற தலைப்பில், 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள் ‘பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்’ என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch2021tamil@gmail.com என்ற இ – மெயில் முகவரிக்கும்; ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch2021eng@gmail.com என்ற இ – மெயில் முகவரிக்கும் ஜனவரி 8 மாலை 5:00 மணிக்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அதனுடன், மாணவர்கள் தங்கள்பெயர், வீட்டின் முகவரி, கல்வி நிறுவனம், மொபைல் போன் எண் ஆகிய விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

கட்டுரைகளை தேர்வு செய்ய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற ஜனவரி 26 ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கும் ரூ. 1லட்சமும், கல்லூரி அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சமும் பரிசாக வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thanks: Dr N.Ramesh, HOD of Zoology,  NMC

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும். செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சந்திரன் சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது நி...