Saturday, January 9, 2021

அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 10, 1936).

அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 10, 1936).


இராபெர்ட் உட்ரோ வில்சன் (Robert Woodrow Wilson) ஜனவரி 10, 1936ல் டெக்சாசில் அமைந்த அவுசுட்டனில் பிறந்தார். அவுசுட்டன் சார்ந்த இரிவர் ஓக்சுவில் உள்ள இலாமார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அவுசுட்டனில் உள்ள இரைசு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டார். இவர் இங்கே பை- பீட்டா- கப்பா கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் முதுபட்டப் படிப்பைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றுள்ளார். வில்சன் பெல் ஆய்வகத்தில் 1944 வரை இருந்தார். இவர் 1944 இல் அப்போது மசாசூசட் கேம்பிரிட்ஜில் உள்ள ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் முதுநிலை உதவியாளராக அமர்த்தப்பட்டார். இன்றும் இவர் அம்மையத்தில் தான் பணிபுரிகிறார். வில்சன் நியூசெர்சியில் உள்ள ஓல்ம்டெல் நகரில் வாழ்ந்துவந்தார். வில்சன் எலிசபெத் உரோட்சு சாவின் அவர்களை மணந்தார். 




Is the universe ringing like a crystal glass? – Astronomy Now

நியூசெர்சியில் உள்ள ஓல்ம்டெல் நகரத்தின் பெல் ஆய்வகத்தில் ஓல்ம்டெல் கொம்பு உணர்சட்டத்தை ஆயும்போது தம்மால் விளக்கமுடியாத இரைச்சல் வாயிலைக் கண்டுபிடித்தனர். புறா எச்சம் உட்பட மற்ற வாய்ப்புள்ள இரைச்சல் வாயில்களை எல்லாம் அகற்றியதும், கடைசியாக இந்த இரைச்சல் அண்ட நுண்னலைக் கதிர்வீச்செனக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெருவெடிப்புக் கோட்பாட்டை நிறுவும் சான்றாக விளங்கியது. வில்சன் ஆர்னோ ஆலன் பெஞ்சியாசுடன் 1964ல் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார். கபித்சாவின் பணிக்கும் மற்ற இருவரின் கண்டுபிடிப்புக்கும் தொடர்பேதும் இல்லை. வில்சனும், பெஞ்சியாசும் 1977ல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றனர். 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெஞ்சியாசுடனும் பியோத்தர் இலியனிடோவிச் கபித்சாவுடனும் பெற்றார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...