Sunday, December 12, 2021

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நேரு நினைவு கல்லூரி மாணவர் அசத்தல்.

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நேரு நினைவு கல்லூரி மாணவர் அசத்தல்.

தேசிய அளவிலான சிலம்பப் போட்டி இன்று (12.12.21) திருச்சி தேசிய கல்லூரியில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500-க் கும் மேற்பட்ட சிலம்பக்கலை வீரர்-வீராங்களைகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள். இந்த போட்டியயை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக ஒருவருக்கு ஒருவர் மோதினார்கள். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதகளும் கேடயமும் வழங்கப்பட்டது. 

இதில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மூன்றாம் ஆண்டு விலங்கியல் பயிலும் மாணவர் T. சந்துரு மூன்றாம் பரிசு பெற்று நம் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அம்மாணவனின் வெற்றிக்கு காரணமாக சிலம்ப ஆசான் முனைவர். ப. மனோகர், உதவிப் பேராசிரியர் தாவரவியல் துறை மற்றும் S. மணிகண்டன் உதவிப் பேராசிரியர் ஆங்கில துறை ஆகியோர் இருவரும் இருந்துள்ளனர். நம் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவனை கல்லுரி தலைவர், செயலர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வாழ்த்தினர். போட்டி ஏற்பாடுகளை திருச்சி கராத்தே மாஸ்டர் சங்கர் ஏற்பாடு செய்தார்.






இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும். செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சந்திரன் சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது நி...