Thursday, April 7, 2022

திருச்சியில் வரும் 16ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டி.

திருச்சியில் வரும் 16ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வரும் 16-ந் தேதி எல்ஐசி காலனியில் உள்ள மயன்நுண்கலைப் பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.


வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் கவிதை, விடுதலை போரில் வீழ்ந்த மலர்கள் என்ற தலைப்பில் பாடல் எழுதுதல், தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகளும் மற்றும் பேச்சுப் போட்டியும் வரும் 17-ந் தேதி உறையூர் வாத்துக்கார தெருவில் உள்ள ஆர்.சி. பள்ளி அருகில் உள்ள டி.என். எம்.எஸ்.ஆர்.ஏ அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை 9095 1 46767 என்ற செல்போன் எண்ணில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இத்தகவலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர செயலாளர் சிவ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர ஆறுதல் பரிசாக நூல்கள்....

கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Whats app Group Link.

ஓவியப் போட்டி 

ஓவியப் போட்டித் தலைப்பு :  மத நல்லிணக்கம் (அல்லது ) விடுதலைப் போராட்டம். ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டுமே ஓவியம் இருக்கவேண்டும்.


விதிமுறைகள்

- கால அளவு : 90 நிமிடங்கள் 

- சார்ட் மட்டும் வழங்கப்படும்.

- வரைவதற்கு  தேவையான அனைத்துப் பொருட்களும் மாணவர்களே கொண்டுவரவேண்டும். 

- Pencil, Watercolor, Crayans, etc எந்த வகையான  ஓவிய உபகரணங்கள் கொண்டும்  வரையலாம்.

- மின்னணு( Electronic)  உபகரணங்களுக்கு அனுமதியில்லை.

- படைப்பின்  கருத்து, வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் முழுமை ஆகியவை கொண்டு ஓவியம் மதிப்பிடப்படும்.          நாள் : 16.04.2022 சனிக்கிழமை காலை 10.30 மணி   போட்டி நடைபெறும் இடம்

(மயன் நுண்கலைப் பள்ளி 

எண் : 2 முதல் தளம், வசந்தம் காம்ப்லெக்ஸ்,  

LIC காலனி  

கே. கே. நகர் , திருச்சிராப்பள்ளி - 620021

(ஐயங்கார் பேக்கரி மாடியில்).)

கட்டுரை மட்டும் 

 கட்டுரைப் போட்டித் தலைப்பு :- 

தனித்துவம் நமது உரிமை! பன்மைத்துவம் நமது வலிமை!           

13.04 . 2022 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி

இளங்குமரன்

7/9. மளிகைத் தெரு

தெப்ப குளம் (Po)

திருச்சிராப்பள்ளி 

620 002

பேச்சுப் போட்டி :  ஏன் வேண்டும் சமூக அக்கறை நமக்கு ?


கவிதைப் போட்டித்  தலைப்பு: வேற்றுமையில் ஒற்றுமை.

பாடல் எழுதும் போட்டித் தலைப்பு.   விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்கள்!     

ஓவியப் போட்டித் தலைப்பு :     மத நல்லிணக்கம் அல்லது 

விடுதலைப் போராட்டம்.



இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...