நேரு நினைவுக் கல்லூரியில் வியாழன் வெள்ளி கோள்களின் அரிய இணைவு தொலைநோக்கியில் கண்டுகளிப்பு.
வெள்ளி கோள்
வியாழன் கோள்
நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய வாயு கோள் வியாழன் ஆகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சூரியனைச் சுற்றி வருகிறது. புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது.
வியாழன், வெள்ளி ஆகிய கோள்களின் இணைவு இன்று (01.03.23) புதன்கிழமை மாலை 6.30 முதல் 8மணி வரை நிகழ்ந்தது. இரு கோள்களும் 0.52 டிகிரி இடைவெளியில் இரு கோள்களும் மிக அருகில் இருந்தது. இது ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. உண்மையில் இரு கோள்களுக்கு இடையிலான தூரம் பல 67 கோடி கிலோமீட்டர்களாக இருக்கும். இந்த இடைவெளி இன்று குறைந்து சுமார் 41 கோடி கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும். அந்த இரு கோள்களும் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது ஒன்றை ஒன்று தழுவி இருப்பது போல் தெரியும்.
இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளி கோள், செவ்வாய் கோள், ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன் மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment