பால்வெளி விண்மீன்களின் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கிய வில்லியம் வில்சன் மார்கன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1906).
வில்லியம் வில்சன் மார்கன் (William Wilson Morgan) ஜனவரி 3, 1906ல் அமெரிக்காவில் பிறந்தார். மார்கன் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்திலும் இலீ பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கலி பயின்றாலும் இறுதி ஆண்டில் வெளியேறி விட்டுள்ளார். இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தன் பணியை தொடங்கியுள்ளார். அங்கே மாணவருக்கு வகுப்புகளும் எடுத்துள்ளார். இந்த வான்காணகம் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த்தாகும். இவர் அப்பல்கலைக்கழகத்தில் 1927ல் பட்டப் படிப்பை முடித்து அறிவியல் இளவல் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு இவர் பயின்ற இரு பல்கலைக்கழக மதிப்புகளும் யெர்க்கேசு வான்காணக பாடங்களும் கருதப்பட்டன. இவர் சிகாகொ பல்கலைக்கழகத்தின் யெர்க்கேசு வான்ஆனகத்தில் இருந்தபோது தன் முதுவர் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். இவர் முனைவர் பட்டத்தை 1931 டிசம்பரில் பெற்றார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்ததும் அப்பல்கலைக்கழகத்திலேயே இணைந்து 1936ல் உதவிப் பேராசிரியராகவும் 1947ல் பேராசிரியராகவும் 1966ல் தகைமைப் பேராசிரியராகவும் ஆனார்.
மார்கன், பிலிப்
சைல்ட்சு கீனான் அவர்களுடன் இணைந்து கதிர்நிரலால் விண்மீன்களை வகைபடுத்தும் (உடுக்கண வகைபாடு) கதிர்நிரல்
வகைபாடு MK அமைப்பு முறையை உருவாக்கினார். இவர் பல
பால்வெளிப் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கினார். ஹபிள் விரும்பிய எளிய,
பண்பியலான, கண்கோளவகை மதிப்பிடுகளுக்கு மாற்றாக,
பால்வெளியின் புறநிலையான, அளக்கமுடிந்த
இயல்புகளைப் பயன்படுத்தும் பால்வெளி அமைப்புகளை உருவாக்கினார். இவர்
பால்வெளிக்கொத்துகளின் நடுவன் அமைந்த மீப்பொருண்மைப் பால்வெளிகளுக்கான இப்போது
பரவலாகப் பயன்படுத்தும் CD வகைப்பாட்டை உருவாக்கினார். 1970 இல் இலவுரா பி.பவுட்சுவுடன் இணைந்து இன்றும் பயன்படுத்தும்
பால்வெளிக்கொத்துகளுக்கான பவுட்சு-மார்கன் வகைபாட்டை உருவாக்கினார். இம்முறை CD
பால்வெளிகள் தாம் செறிவான வகை ஒன்று பால்வெளிக்கொத்துகள் என
இனங்கண்டது.
மார்கன் யெர்க்கேசு வான்காணகத்தில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். மேலும் 1960 முதல் 1963 வரை அதன் இயக்குநராகவும் விளங்கினார். இவர் டொனால்டு ஆசுடெர்பிராக், சுட்டிவார்ட் சார்ப்ளெசு ஆகிய இருவரோடு இணைந்து, ஓ, பி வகை விண்மீன்களின் தொலைவுகளை அளந்து நம் பால்வழிப்பால்வெளியில் சுருள்கைகள் நிலவுதலை நிறுவினார். சில காலம் இவர் வானியற்பியல் இதழின் மேலாண்மை ஆசிரியராக விளங்கினார். இந்த வெளியீடு முதலில் ஜார்ஜ் எல்லேரி ஃஏல் அவர்களால் உலக அளவில் வானியற்பியலாளர்களின் கூட்டுறவை மேம்படுத்த தொடங்கியதாகும். இவர் சிகாகோ பல்கலைக்கழக வானியல் துறையின் தலைவராக 1960 முதல் 1966 வரை விளங்கினார். இவரது முதன்மை ஆய்வுக் கருப்பொருள் விண்மீன், பால்வெளி வகைபாடு ஆகும். இவர் நம் பால்வழிப் பால்வெளியில் சுருள்கைகள் அமைதலை நிறுவவும் உதவியுள்ளார்.
இந்த அறிவியல்
தகுதிகளைத் தவிர சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் வானியல் இயக்குநராகவும்
ஜார்ஜ் ஏல் அவர்களின் வானியற்பியல் இதழின் மேலாண்மை ஆசிரியராகவும் இருந்துள்ளார். புரூசு
பதக்கம் (1958), என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1961),
அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (1964),
அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம்
(1980), எர்ழ்செல் பதக்கம் (1983) போன்ற பதக்கங்கள் பெற்றுள்ளார். குறுங்கோள் 3180 மார்கன் இவரது
பெயர் இடப்பட்டுள்ளது. பால்வெளி விண்மீன்களின் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கிய வில்லியம்
வில்சன் மார்கன் ஜூன் 21, 1994ல் தனது 88வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment