ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் தமிழர்: அவர் யார் தெரியுமா?
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் 'ககன்யான்' திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இத் திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டர் சுபானஷு சுக்லா ஆகியோரின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். விண்வெளி வீரர்களுக்கான சிறகு பட்டையை அவர்களின் சீருடையில் குத்திய பிரதமர், 'நாட்டின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை ஏந்தி நிற்கும் 4 சக்திகள்' என்று பாராட்டு தெரிவித்தார்.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்தச் சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இதற்கான திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவு சுற்றுவட்டப் பாதைக்கு விண்கல மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, ஒன்றுமுதல் 3 நாள்கள் ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே இத் திட்டத்தின் நோக்கம். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, கடலில் தரையிறக்கும் வகையில் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கென இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வீரர்களைச் சுமந்து செல்லும் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, தரையிலிருந்து 11.6 கி.மீ. உயரம் சென்றதும் ராக்கெட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு பத்திரமாக கடலில் தரையிறக்கப்பட்டது. அப்போது விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பாராசூட்டுகள் விரிதல் உள்ளிட்ட சோதனைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்ட சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். நிகழாண்டு இறுதியில் அல்லது 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முழுவதும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் மற்றும் விண்கலனில் முதல் முறையாக இந்திய வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் இத் திட்டம் இந்தியர்களிடையே மட்டுமின்றி, உலக அளவிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி. ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 இந்திய வீரர்களின் பெயர்களை அறிவித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த 4 இந்திய விமானப் படை வீரர்களுக்கு ரஷியாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியா விண்வெளிக்குள் நுழையவிருக்கிறார். இம்முறை, முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்திய வீரர்கள் விண்வெளிக்கு முதல் முறையாக அனுப்பப்படவிருக்கின்றனர்.
சுகன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான இயந்திரங்களும், உபகரணங்களும் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. நாட்டின் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர், நிலவின் தென் துருவத்தை ஆயவு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டத்தில் பங்காற்றியது போன்று. ககன்யான் திட்டமும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு இன்றி சாத்தியமாகாது. விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் வெற்றிகள், இளைய தலைமுறையினரிடையே அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டுவதோடு மட்டுமின்றி, 21-ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா உருவெடுக்கவும் உதவும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 5 மடங்காக வளர்ந்து, 4,400 கோடி டாலா மதிப்பை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் சாவதேச வாத்தக மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது வரும் நாளிகளில், நிலவுக்கு மீண்டும் விண்கலனை அனுப்பி அங்கிருந்து மாதிரிகள் எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது வரும்
உருவெடுத்துள்ளது. வரும் நாளிகளில், நிலவுக்கு மீண்டும் விண்கலனை அனுப்பி அங்கிருந்து மாதிரிகள் எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2035-இல் சொந்த விண்வெளி மையத்தையும் இந்தியா அமைக்கும் என்றார்.
ரூ.1,800 கோடி மதிப்பில் 3 திட்டங்கள்:
முன்னதாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட்டுகளின் சீரான காற்று வெளிப்படுத்துதல் செயல்பாட்டை பரிசோதிக்கும் 'ட்ரைசோனிக காற்று சுரங்கப் பாதை அமைப்பு, தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செமி-கிரையோஜெனிக் என்ஜின் மற்றும் என்ஜினின் பலவேறு நிலை பரிசோதனை சோதனை வசதி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ஏவுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகியவற்றை பிரதமா மோடி தொடங்கி வைத்தார். இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவிருக்கும் இந்த மூன்று திட்டங்களும் ரூ 1,800 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சென்னையில் அஜித் கிருஷ்ணன் 1982ம் ஆண்டு ஏப்ரல்19ம் தேதி பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர். அவர் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்றவர்.
அஜித் கிருஷ்ணன், 2023 ஜூன் 21ல், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார். அஜித் கிருஷ்ணனுக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் சூ-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாக்குவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment