Wednesday, February 21, 2024

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக வாய்மொழி அல்லாத செய்தி தொடர்பியியல்-கருத்தரங்கு.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக வாய்மொழி  அல்லாத செய்தி தொடர்பியியல்-கருத்தரங்கு.


திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக "வாய்மொழி அல்லாத செய்தி தொடர்பியியல்" (Non-verbal communication)  என்ற தலைப்பில் 21 பிப்ரவரி 2024 புதன் கிழமை காலை கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையுரையாற்றி பேசிய போது வளர்ந்துவரும் விஞ்ஞான மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் பன்முக திறமைகளை வளர்த்து கொண்டால்  தான் மாணவர்கள் நல்ல பதவிகளில் அமர முடியும் என்று கூறினார்.


கல்லூரி செயலார் அவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய போது வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு செய்தி தொடர்பில் திறனை வளர்த்துக் கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் A.வெங்கடேசன், துணை முதல்வர் K.Tதமிழ்மணி,    சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உரையாற்றிய போது மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள கல்லூரியில் உள்ள வசதிகளை முழமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மை துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் N.S. சிபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 


மாணவர்கள் வாய்மொழி  அல்லாத செய்தி தொடர்பியியல் திறனை எவ்வாறு வளர்த்து கொள்ள வேண்டுமென கூறியதுடன், அமெரிக்கா, ஜப்பான் ஆசியா போன்ற நாடுகளில் இத்திறனிற்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என கூறினார். மேலும் ஒரு மனிதனின் முக்கிய உடல் உறுப்புகளான கண், காது, மூக்கு, கை, கால்களையெல்லாம் எவ்வாறு பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக் கொள்கிறார்கள் என்று கூறியதுடன் ஒவ்வொரு நாடுகளிலும் எந்த மாதிரியான செய்தி தொடர்பியலை பயன் படுத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் சிறந்த வேலை வாய்ப்பினை பெற முடியுமென வலியுறுத்தி கூறினார். 


முன்னதாக உதவி பேராசிரியர்  R.உமா மகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகவியல் இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இறுதியாண்டு படிக்கும் இளம் வணிகவியல் மற்றும் முது வணிகவியல் மாணவர்கள் 230 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இறுதியாக உதவி பேராசிரியர் S.சரவணகுமார் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...