உணவைத் தேர்ந்தெடுப்பதில் வியாதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
நேரு நினைவுக் கல்லூரியில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தாவரவியல் மற்றும் ஊட்டச்சத்து உணவுமுறை துறையின் சார்பாக "இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்" என்ற தலைப்பில் 5 மார்ச் 2024 செவ்வாய் கிழமை காலை கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி செயலார் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தானே உருவாகும் நோயை குணப்படுத்த இயற்கை விவசாயமே சிறந்த மருந்து என்றும் இயற்கை விவசாய உணவு அருந்த மனிதர்கள் 100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் என்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் இயற்கை உணவு அருந்தினால் உற்சாகமாக வலிமையாக வாழலாம் என்றும்துணை முதல்வர் K.T. தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினார்.
இயற்கையாக விளைவிக்கும் ஒவ்வொரு உணவுப் பொருளும் மருந்தாக செயல்படுகிறது. திருமூலர் கூற்றுப்படி உணவே மருந்தாகும் என்று 1996 முதல் 28 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் தஞ்சாவூரை சேர்ந்த இயற்கை விஞ்ஞானி சித்தர் சிறப்புரை ஆற்றினார். இந்தியாவில் உள்ள 90 சதவீத விவசாய நிலம் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் வளம் குறைந்து விட்டதாக ICR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரை இந்த மண்ணில் விளையும் பொருட்கள் சத்து குறைந்த பொருட்களாகவே இருக்கும். மனிதனுக்கு ஏற்படும் அனைத்துமே வளர்சிதை மாற்ற குறைபாடு மட்டுமே, நோய் அல்ல. அரிசியில் நாம் பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் சாப்பிட்டு வருகிறோம். அனைத்து நோய்களும் சமையல் அறையில் இருந்து தான் வருகிறது. நம்மை சுற்றி கிடைக்கும் உணவு பொருட்களை நமது உடம்பிற்கு ஏற்ற சிறந்த உணவாகும். பசி இல்லாமல் சாப்பிடுவது நோய்க்கு வழி வைக்கிறது. இந்தியாவில் 2 லட்சம் அரிசி வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் இப்போது 500 வகை அரிசிகள் உள்ளன. இயற்கை விவசாயம் சரியாக இருந்தால் ஆரோக்கியம், சூழ்நிலை, சுற்றுப்புறம் ஆகிய அனைத்தும் சிறப்பாக இயங்க வழிவகுக்கிறது என்று சிறப்புரை ஆற்றினார்.
மேலும் நமது சுற்றுப்புறத்தில் விளையும் உணவுப் பொருட்களையே சாப்பிட வேண்டும் என்றும், நமது பிரச்சனைகளுக்கு தேவையான உணவு முறைகள் பற்றியும் விளக்கினார். நிகழ்வின் நிறைவாக தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் R. மாதரசி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
- இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தங்க சத்து அதிகம் நிறைந்த கருங்குருவை, கருப்பு கவுனி அரிசி வகைகள், முருங்கை இலை பவுடர், முருங்கைப்பூ, பப்பாளி இலை, ஆவாரம்பூ, ஆவாரம் பூ, செம்பருத்தி ஆகியவை நிவாரணம் தரும்.
- சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெள்ளி சத்து நிறைந்த சாம்பல் பூசணி, வாழைத்தண்டு, முள்ளங்கி ஆகியவை நிவாரணம் தரும்.
- மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருகம்புல், மணத்தக்காளி ஆகியவை நிவாரணம் தரும்.
- பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருகம்புல், மஞ்சள் கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, வில்வம் ஆகியவை நிவாரணம் தரும்.
- சரியான உணவு இல்லாமல் மேற்கொள்ளும் மருந்துகள் பயன் தராது. உணவு சரியாக இருந்தால் மருந்தே தேவைப்படாது.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment