Tuesday, December 17, 2024

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள். 


நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் 13/12/2024ல் சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள கோளரங்கத்தில் சூரிய குடும்பம், கோள்கள், வானம் மற்றும் பருவங்கள், கிரகணம், நிலா, வால் நட்சத்திரம், வால்மீன்கள், விண்மீன் சுழற்சிகள் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள கேலக்ஸி போன்றவை உருவான விதம் ஆகியவற்றை நவீன இரவு வான் அமைப்பு மூலம் மாணவர்கள் எளிமையாக புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) உருவாக்கப்பட்ட “Science on a Sphere” (SOS) என்ற புதிய வசதி பூமியை விவசாயம், காடு, கடல் வெப்பநிலை மற்றும் காலநிலை என பல்வேறு கண்ணோட்டங்களில் எளிமையாக புரிந்து கொண்டனர்.


அணுக்கரு உலை மாதிரிகள், அணுக்கரு வினை விளக்கப்படங்கள், இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், கண்டுபிடிப்புகள், போக்குவரத்து, ஏவுகணைகள், போர் வாகனங்கள், பல்வேறு உயிரினங்கள் இதய மாதிரிகள், சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை, பிருத்வி, குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை, அக்னி, நடுத்தர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மின்னணு உபகரணங்கள், மின்னணு ரேடார்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் உயிர் ஆதரவு சாதனங்கள், தொலைக்காட்சி மற்றும் புகைப்பட கருவிகள் வளர்ச்சி படிநிலைகள், டிஆர்டிஓ வடிவமைத்த இந்திய வீரர்கள் உறைபனி வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட பிரத்யேக ஆடைகளின் மாதிரியும், விண்வெளி மற்றும் ராணுவ வீரர்களின் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பல்வேறு கண்காட்சிகள் மூலம் அறிவியலை எளிமையாக புரிந்து கொண்டனர்.



இஸ்ரோ கண்காட்சிகள் மூலம் பல்வேறு வகையான ராக்கெட்கள் செயற்கைகோள்கள், வினாடிவினா, விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஏவுதளங்களின் மாதிரிகள் மூலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு பற்றி எளிமையாக புரிந்து கொண்டனர். மேலும் அறிவியல் பூங்காவில் நெம்புகோல்கள் தத்துவம், ஒத்திசைவு அதிர்வெண், மையவிலக்குவிசை, கோள்களின் நீள்வட்ட சுற்றுப்பாதை, விசை, ஒலியின் வேகம் மற்றும் எதிரொலிப்பு, ஒளியின் பண்முக எதிரொளிப்பு, ஆகியவற்றை செயல்முறை மூலம் செய்து கற்றுக்கொண்டனர்.   

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் 14/12/2024ல் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வகத்தை பார்வையிட்டனர். சுற்றுச்சூழல் மைய தலைவர் முனைவர் சண்முகம் அவர்கள் கழிவுகள் மூலம் மீத்தேன் தயாரிக்கும் முறைகள் பற்றி விளக்கினார்.  தனது ஆய்வகத்தில் பல்வேறு விதமான மீத்தேன் தயாரிக்கும் முறைகளும், சேகரிக்கும் முறைகளும் மற்றும் வர்த்தக ரீதியாக பல்வேறு இடங்களில் அமைத்த தயாரிப்பு மற்றும் பயிற்சி முறைகள்  பற்றியும் செயல்முறை விளக்கம் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.


நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் 14/12/2024ல் சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற மின்னனுவியல் கண்காட்சியில் (EFY)  கலந்துகொண்டு பார்வையிட்டனர். இது தற்போதைய தலைமுறை தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. பல்வேறு வகையான மல்டிமீட்டர், CRO, AFO, தானியங்கி PCB அசெம்பிளிங் யூனிட் சிஸ்டம் மற்றும் கரைசல் கருவி ஆகியவை கூறுகள் மற்றும் அமைப்பைக் கண்டறிய உதவும் சிறப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு, 3D ரெசின் பிரிண்டர் மற்றும் மெட்டல் பிரிண்டர், நுண்ணோக்கி அடிப்படையிலான PCB பழுதுபார்க்கும் அலகு கிட், 100x ஜூம் ஆப்டிகல் லென்ஸ் வரை ஷார்ட் சர்க்யூட் போர்டைப் பழுதுபார்க்கும் கருவி, ரிப்பன் அடிப்படையிலான PCB மற்றும் 12 அடுக்கு மேம்பட்ட PCB போன்ற பல்வேறு மின்னணு கருவிகள் பற்றிய விளக்கங்களை அறிந்து கொண்டனர். 

3D ரெசின் பிரிண்டரில் பல காட்சிகளை வழங்கக்கூடிய இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் சுயமாக ஒரு 3D மாதிரியை உருவாக்க முடியும். செயல்முறைக்கு ஒரு குறிப்பிட்ட மென்பொருள் உள்ளது. 3D மாதிரியையும் ஏற்றுமதி செய்யலாம். இது பழுதுகளைப் பார்க்கவும் பயன்படுகிறது. தற்போதைய தலைமுறை தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளைக் கற்றுக்கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் இது மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமாகவும் இருக்கிறது. சில புதிய நிறுவங்கள் மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கியது. இது மாணவர்களுக்கு புதிய மற்றும் மதிப்புமிக்க அனுபவமாகும். இயற்பியல் துறை  பேராசிரியர் பொ.ரமேஷ், ஏற்பாடுகளை செய்து இருந்தார்.













கோளரங்கம் | Birla Planetarium | ஓர் பயணம் -பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் | சென்னை | KalviTv



வான்வெளியை கண்முன்னே காட்சிப்படுத்தும் கோளரங்கம்.





இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...