Saturday, July 20, 2024

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.



சந்திரனில் மனிதன் முதன்முதலில் இறங்கியதை நினைவுகூரும் வகையில் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. ஜூலை 20, 1969 அன்று, அப்பல்லோ 11 சந்திரனுக்கு முதல் மனிதர்களை ஏற்றிச் சென்றது. இந்த நாளில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் இரண்டரை மணி நேரம் செலவிட்டார். நிலவில் மனிதனை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற மைல்கல்லையும் இந்த நாள் குறிக்கிறது. 1971 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன், மனிதன் முதன்முதலில் நிலவில் இறங்கியதன் நினைவாக ஜூலை 20 ஆம் தேதியை தேசிய நிலவில் இறங்கும் தினமாக அறிவித்தார்.





19.7.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி புதிய வளாகத்தில், திருச்சி- புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் இரமேஷ் மற்றும் குழுவினர்  Celestron 6SE 6" Advanced வானியல் தொலைநோக்கி மூலம் நிலவைக் காணும் நிகழ்வு நடத்தப்பட்டது. பெண்ணாடம் பகுதியைச் சார்ந்த பல பள்ளிகளில் இருந்து மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். பேராசிரியர் இரமேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடி, நன்கு வினாக்கள் கேட்ட மாணவர்களுக்கு விண்ணியல் தொடர்பான விளக்க அட்டைகள் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம்  வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில்  நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.







இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் சூரிய வடிகட்டி வழியாக சூரியனின் கரும்புள்ளிகள் மற்றும் அழகிய நிலா ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. முதுநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் சந்தோஷ்குமார், அனந்தராமன், இளநிலை இரண்டாம் ஆண்டு  இயற்பியல் அருட்செல்வன்  மூன்றாம் ஆண்டு இளநிலை வேதியல் ஸ்ரீதர்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர். இந்த விழாவில் 2000க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும்  பொதுமக்கள்  பங்கு பெற்றனர். நேரு நினைவுக் கல்லூரி, பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிலா திருவிழாவை நடத்தியது.மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது. 






நேரு நினைவுக்கல்லூரி கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாடம் தலைமை ஆசிரியர் திரு.ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழக செயற்குழு உறுப்பினர் திரு. எழிலன் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.




2 comments:

  1. கிராமப் பூற மாணவர்களின் முன்னேற்றத்திலா அதிக பங்காற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி , பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ,சர்வதேச நிலவு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு 19.7.2024 அன்று வானியல் தொலைநோக்கி மூலம் நிலவைக் காணும் நிகழ்வினை நடத்தி , இப்பகுதி மாணவர்கள் , பொதுமக்களுக்கு வானியல் ஆர்வத்தை தூண்டியதற்து நெஞ்சார்ந்த நன்றிகள். இந்நிகழ்வில் பங்கு கொண்ட முனைவர் திரு.இமேஷ் , முதுகலை மாணவர்கள் திருசந்தோஷ்குமார், திரு அனந்தராமன் , இளங்கலை மாணவர்கள் திரு.அறிவுச்செல்வன் , திரு. ஸ்ரீதர் ஆகியோர்க்கு நன்றிகள். இந்நிகழ்வினை முன்னின்று ஏற்பாடு செய்த தலைமையாசிரியர் திரு இராமச்சந்திரன் & இருபால் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறது.

    இங்ஙனம்
    லயன் மேழிச்செல்வன் - NMC ALUMINI, 1981-84 BATCH.

    ReplyDelete

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...