Tuesday, September 22, 2020

கல்லூரிகள் திறப்பு தேதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

கல்லூரிகள் திறப்பு தேதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 

நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில் வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சி மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளின்படி, கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு 9 - 12ஆம் வகுப்பு மாணவர்கள் வரலாம். ஆசிரியர்களிடம் உரிய ஆலோசனைகளைப் பெற்றுச் செல்லலாம். ஆனால் வழக்கமான முறையில் வகுப்புகள் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. 

 

கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று தனது ட்விட்டரில் முக்கியப் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், கொரோனா நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு வல்லுநர்கள் குழு அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம். இந்த மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்தப்படும். செமஸ்டர் விடுமுறை மார்ச் 27, 2021 முதல் ஏப்ரல் 4, 2021 வரை விடப்படும்.


Press Release UGC <----Click

No comments:

Post a Comment

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்! செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்கள...