Wednesday, October 21, 2020

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி..முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி..முதல்வர் பழனிசாமி.

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழு கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மற்றும் வணிக வளாகங்கள் நாளை முதல் இரவு  10 மணி வரை திறந்து அனுமதி வழங்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...