Thursday, February 5, 2026

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை மாணவனுக்கு பாராட்டு விழா.

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா.


இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்-I எட்வர்டு தேவகுமாரன் ஐயா அவர்கள் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்-II முபாரக் ஐயா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் அவர்களும்  முன்னிலை  வகித்தார்கள். 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது. களிமண் சுதை வேலைப்பாடு என்ற போட்டியில் உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு பயிலும் வே.தரணீஷ் என்ற மாணவன் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


இன்று நடைபெற்ற தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட  சான்றிதழும், ட்ராபியும் வழங்கி மாணவனுக்கும் பள்ளிக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். உடன் உப்பிலியபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடன் இருந்தார்கள்.


பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் ஒத்துழைப்பு நல்கினார். இப்போட்டிக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி  அவர்கள் வழிகாட்டினார்.சுப்ரமணியன், ஆனந்தம், சாந்தி, சுதாகர் ஆகியோர் ஒத்துழைப்பு தந்தனர்.


No comments:

Post a Comment

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்?

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்? 2026 ஏப்ரல் 1 நிலவரப்படி, ஆர்டெமிஸ் II விண்ணேவு வாகன...