Monday, February 2, 2026

சேந்தமங்கலம் வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம்  வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம்வேதா லோக வித்யாலயா சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார்இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.




தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள், ஹைராஸ்கோப், குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது 





நாமக்கல் அஸ்ட்ரோ இணை செயலாளர் துர்கா தொலைநோக்கி தொலைதூர தொலைதூரக் கோபுரம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டதுஅனைவரும் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது மாணவ மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.









No comments:

Post a Comment

சேந்தமங்கலம் வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம்  வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். சேந்தமங்கலம்வேதா லோக வித்யாலயா சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலை...