Monday, February 23, 2026

த.பாதர் பேட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் - புத்தகக் கண்காட்சில் பங்கேற்றப்பு.

த.பாதர் பேட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் - புத்தகக் கண்காட்சில் பங்கேற்றப்பு.

உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  த.பாதர் பேட்டையில் வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு 92 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். மாணவர்கள் புத்தகக் கண்காட்சியை மிகவும் மகிழ்ச்சியாக பார்த்தனர். மாணவர்களுக்கு தேவையான  புத்தகங்களை வாங்கி சென்றனர்.வானியல் அரங்கில் செயற்கைக்கோள், நிலா, புதிர்கள், விண்வெளி வீரர்கள்  பதாகைகள் போன்றவற்றை கண்டு களித்தனர்.



புத்தக் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் திருமதி தனலட்சுமி அறிவியல் ஆசிரியர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார். உடன் ஆ.சுப்ரமணியன், ஆனந்தம், க. பா. சுப்ரமணியன் ஆசிரியர்களுடன் அழைத்துச் சென்று வந்தது மிகவும் சிறப்பு. புத்தகக் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சிறைச்சாலை கைதிகளுக்கு நூல் வாங்கி, அன்பளிப்பாக பெட்டியில் இட்டு வந்தோம். புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்த திருச்சி நிர்வாகத்திற்கு எம் பள்ளயின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏.











No comments:

Post a Comment

தென் துருவ பனியில் பிரபஞ்ச ரகசியங்களை கண்ட விஞ்ஞானிக்கு நோபல் பரிசு.

தென் துருவ பனியில் பிரபஞ்ச ரகசியங்களை கண்ட விஞ்ஞானிக்கு நோபல் பரிசு. உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்ப...