Tuesday, October 13, 2020

அக்டோபர் 15,16 இரண்டு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும்: அரசு அறிவிப்பு

அக்டோபர் 15,16 இரண்டு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும்: அரசு அறிவிப்பு.

மிசோரம், பஞ்சாப்பில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட  உள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கோரோனோ ஊரங்கில் ஒவ்வவோரு மாதமும் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவவடுத்துக் கொள்ளலாம் என்று செப்டம்பர் 30-ம்தேதி அறிவித்தது. கல்வி நிறுவனங்களில் உரிய கோரோனோ வழிகோட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்நிலையில் மிசோரம்  மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.16 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை  இயக்குநர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, ''கல்வித்துறை  அமைச்சர்,  மத்திய இளைஞர் மேம்பாட்டு அமைப்பு, மாணவர் அமைப்புகள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகிடயோருடன் கலந்து ஆலோசனை செய்து  இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி மிசோரம் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.16 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன,  என்று தெரிவித்தார். இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அக்.15-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் படிப்படியாகத் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பெற்றோரிம் அனுமதி பெற்றுப் பள்ளிக்கு வரலாம். வருகைப் பதிடவேடு கட்டாயம் கிடையாது. ஆன்லைன் வகுப்புகள் நடத்த அதிகம் ஊக்குவிக்கப்படும்.


அதேபோல அக்.15-ம் தேதிக்குப் பிறகு உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு முதுகலை  மாணவர்கள் மற்றும் ஆரோய்ச்சி மாணவர்கள், கல்லூரிஆய்வகப் பணிகளுக்காக வர அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...