Thursday, October 22, 2020

ஆன்லைன் வினாடி வினா போட்டி 50,000/- பரிசு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

ஆன்லைன் வினாடி வினா போட்டி 50,000/- பரிசு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். முதல் நிலை மற்றும் அரை இறுதி போட்டிகளில் சரியான பதில் அளிப்போருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

 

இதுகுறித்து சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதற்கான அறிவூட்டல் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பொது மக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில அளவிலான இணையவழி வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். அனைத்து சுற்றுகளும் 'கோல் குயிஸ் ஸ்போர்ட்ஸ்' என்ற யூ டியூப் இணையதளத்திலேயே நடத்தப்படும்.

 

முதல் நிலைப்போட்டி 3 சுற்றுகளை கொண்டது. முதல் சுற்று 25-ந்தேதி மாலை 4 மணிக்கும், 2-ம் சுற்று 26-ந்தேதி காலை 11 மணிக்கும், 3-ம் சுற்று அன்று மாலை 4 மணிக்கும் நடக்கும். இணையவழி தளத்திலேயே கருத்துகளை தெரிவிக்கும் பகுதியில் சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலை பதிவிட வேண்டும். மொத்தம் 36 குழுக்கள் அரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அரை இறுதி மற்றும் இறுதி சுற்றுகள் பின்வரும் வார இறுதியில் நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்படும். தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும். ஓர் அணி அதிகபட்சம் 2 நபர்களை கொண்டதாக இருக்க வேண்டும். அனுமதி இலவசம். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். முதல் நிலை மற்றும் அரை இறுதி போட்டிகளில் சரியான பதில் அளிப்போருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

போட்டியின் விதிமுறைகள் :
  • சரியான பதிலை முதலில் பதிவிடுவோரே தொடர்ந்து போட்டியில் நீடிப்பர்.
  • ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிலை பதிவிட முடியும்
  • மொத்தம் 36 குழுக்கள் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.
  • தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட அறிவிப்புகள் அறிவிக்கப்படும்.
பரிசு தொகை :
  • முதல் பரிசு – ரூ.50,000/-
  • இரண்டாம் பரிசு – ரூ.25,000/-
  • மூன்றாம் பரிசு – ரூ.15,000/-

4 comments:

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...