Friday, October 30, 2020

டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை திறக்க வாய்ப்பில்லை. அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை திறக்க வாய்ப்பில்லை. அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என மருத்துவக்குழு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திறந்தவெளி வகுப்புகளை நடத்த சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது.

Source : News18.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...