Tuesday, November 17, 2020

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... காணொளி

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... காணொளி.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை ,நாகை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும். இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு ,அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...