Tuesday, November 17, 2020

விண்வெளி பயணத்திற்கு ஒரு மைல்கல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பயணம்... காணொளி

விண்வெளி பயணத்திற்கு ஒரு மைல்கல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பயணம்... காணொளி.


அமெரிக்காவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களுடன் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலம் ஒன்று அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்திற்கு சிங்கப்பூர் நேரப்படி இன்று (நவம்பர் 16) காலை 8.27 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் மிதக்கும் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து வடிவமைத்துள்ளன. 


அங்கு ஆய்வு செய்வதற்காக நாசாவின் விண்வெளி வீரர்கள் அவ்வப்போது சென்று வருகின்றனர். ரஷ்யாவின் விண்கலம் மூலம் அந்நாட்டிலிருந்து விண்வெளி வீரர்களை நாசா அனுப்பி வந்த நிலையில், பயணக் கட்டணத்தைக் குறைக்கும் விதமாக ‘எலன் மஸ்க்’ என்பவரின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஃபெல்கான் 9’ ரக ராக்கெட், கடந்த ஜூன் மாதம் இரு விண்வெளி வீரர்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தது. 


இதையடுத்து, புதிய மைல்கல்லை எட்டும் விதமாக வர்த்தக ரீதியான பயணத்தை நாசா முதன்முறையாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ‘கென்னடி’ ஏவுதளத்திலிருந்து நான்கு வீரர்களுடன் ‘ஃபெல்கான் 9’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏறக்குறைய 27 மணி நேர பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் நேரப்படி நாளை நண்பகல் 12 மணியளவில் இந்த ராக்கெட் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டில் சென்றுள்ள நான்கு வீரர்களும் ஆறு மாதங்களுக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஜோ பைடன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...