Tuesday, November 17, 2020

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🥨புளியின் - மருத்துவ குணங்கள்.

 ✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🥨புளியின் - மருத்துவ குணங்கள்.

🥨🥨🥨🥨🥨🥨

நாம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதில் முக்கியமாக புளி இல்லையென்றால், பல நேரம் உணவு ருசி இருக்காது. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு.

கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீக்கம் வந்தாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ.. புளியை நன்றாக கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ்பதத்துக்கு தயாரித்துக் கொள்ள வேண்டும். அடிபட்ட இடத்தில் இந்தக் கூழை அளவான சூட்டில் பத்து போட்டால் வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாகும்.


🥨🥨🥨🥨🥨🥨

வெயில் காலங்களில் நீர்க்கடுப்பு நம்மை வாட்டி எடுத்துவிடும். ஆண்குறியில சிலருக்கு கடுமையான எரிச்சலும் வலியும் வரும். இந்த மாதிரி சமயங்களில் புளியங்கொட்டையை முழுவதுமாகவோ அல்லது அதன் தோலை மட்டுமோ எடுத்து சாப்பிட்டால் உடனடி குணம் கிடைக்கும்.

ஆளை உருக்கும் கணைச்சூடு உள்ளவர்கள் இலையை எடுத்து அதோடு சின்ன வெங்காயத்தை சேர்த்து இடித்து, சாறு பிழிந்து 100 மில்லி அளவுக்கு சாப்பிட வேண்டும். வாரம் ஒரு தடவை என்று 3 முறை இப்படி சாப்பிட்டால் கணைச்சூடு தணியும்.

வயித்துக்கோளாறும் சரியாகும். இந்த சாறை குடித்த பிறகு, 3 மணி நேரத்துக்கு தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடக்கூடாது.🥨🥨🥨🥨🥨🥨

உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால் துடிக்கிறவர்களுக்கு புளியை தண்ணீரில் ஊறப்போட்டு நன்றாக கரைத்து, அதோடு பனைவெல்லம் (கருப்பட்டி) சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் இந்தக் கரைசல் கைகண்ட மருந்தாக இருக்கும்.

7 Health Benefits Of Tamarind + Possible Side Effects

🥨🥨🥨🥨🥨🥨

புளியம்பூ, புளியம்பிஞ்சு இரண்டையும் தேவையான அளவு க.மிளகாய், உப்பு சேர்த்து இடித்து காய வைக்க வேண்டும். இதை ஊறுகாய் மாதிரி சாப்பாட்டோடு சேர்த்துக்கொண்டால் உடல் உஷ்ணம் தணிவதோடு நல்ல பசியும் உண்டாகும்.

🥨🥨🥨🥨🥨🥨

புளியில் இப்படி நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும், அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சு என்கிற மாதிரி, ஒரு சில நோய்களுக்கு புளி ஆகாது. அதனால் சமயமறிந்து பயன்படுத்துவது நல்லது.

🥨🥨🥨🥨🥨🥨

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள   எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த   ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி:  பெருசங்கர், 🚎 ஈரோடு மாவட்டம், பவானி

வாட்ஸ்அப் நம்பர் ((7598258480))

செல் நம்பர் ((6383487768))📞

🥨🥨🥨🥨🥨🥨

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...