✍️கவிதை ✍️ 🤱என் தேவதை🤩அம்மா 🤱- இரஞ்சிதா தியாகராஜன்.
கருங்குயில் நிலவே.....
கற்பத்தில் சுமந்த என் உறவே.....
என் அன்னையே !!!
நானே உன் சுவாசத்தில்
பூத்த மல்லிகையே.....
இரவுகள் பல தூங்காமல்....
என் கால் உதை பாராமல்....
என் அழகை அறியாமல்....
காதலித்தாய்.
தொப்புள் கொடியால் என்னை....
கட்டியணைத்தாய்.
அம்மா ....என அழைக்க ஆசையாக வந்தேன் உன் ஏழாண்டுகள் தவமாய்....
ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாய் அன்பின் வரமாய்....
புத்தாடை என்றும் நீ அணிந்ததில்லை....
புதுப் பெண்ணாய் என்னை வர்ணிக்க நீ மறந்தில்லை....
சில சமயங்களில் என் மேல் கோபம் கொள்வாய்....
செல்லமே!!!வைரமே!!!சமாதானமும் செய்வாய்....
உங்கள் புகழை சொல்ல தீராதே...
என் வாழ்நாள் முழுதும் போதாதே....
நீங்கள் என்னை விட்டு நீங்காமல் என்றென்றுமாக...
வரம் கேட்கிறேன் இறைவனிடம் நித்தமுமாக.....
✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
அருமையான வரிகள் 💯
ReplyDeleteNice line😊
ReplyDeleteHeart' touching line's super
ReplyDeleteThank You
Deleteஅருமையான வரிகள் சகோதரி
ReplyDeleteSuper 😍 heart touching ❤️ lines
ReplyDeleteThank You
ReplyDelete