Thursday, November 26, 2020

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🥋🥋கம்பின் நன்மைகள்.

 ✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🥋🥋கம்பின் நன்மைகள்.

கம்பு மருத்துவ பயன்கள் | Health Benefits of Pearl Millet in Tamil | Kambu  benefits - YouTube

🥋🥋🥋🥋🥋🥋

அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்களாக இருக்கின்றன. இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று தான் “கம்பு”. இந்த கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பு உணவாக உட்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

🥋🥋🥋🥋🥋🥋

சிறுதானியம் ஆன கம்பில் பல உடலுக்குத் தேவையான சத்துக்களும் வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.அதனால் கம்பை தொடர்ந்து உணவாக உட்கொள்ளும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக பயன்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

கம்பு மருத்துவ பயன்கள்! - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்

🥋🥋🥋🥋🥋🥋

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

🥋🥋🥋🥋🥋🥋

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு

🥋🥋🥋🥋🥋🥋

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

🥋🥋🥋🥋🥋🥋

தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. காம்பில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு மலசிக்கல் போன்ற பிரச்சினை வராமல் முற்றிலுமாக தடுக்கின்றது.

தினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! |  Health Benefits Of Drinking Kambu Koozh - Tamil BoldSky

🥋🥋🥋🥋🥋🥋

சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும்

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை னாய் ஏற்படாமல் காக்க உதவும்.எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் நீங்கள் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.

🥋🥋🥋🥋🥋🥋

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

🥋🥋🥋🥋🥋🥋

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

Buy Kambu Koozh Mix Online

🥋🥋🥋🥋🥋🥋

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

🥋🥋🥋🥋🥋🥋

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

🥋🥋🥋🥋🥋🥋

அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.

🥋🥋🥋🥋🥋🥋

கேழ்வரகு - கம்பு கூழ்: ஒரு பார்வை

Buy Kambu Koozh Mix Online

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1/2 கப்

கம்பு மாவு - 1/2 கப்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும். உப்பு போட வேண்டாம்.

🥋🥋🥋🥋🥋🥋

காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

🥋🥋🥋🥋🥋🥋

அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

🥋🥋🥋🥋🥋🥋

தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் கிண்டிவிடவும்.

சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.

அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிளர வேண்டும்.

5 நிமிடம் கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமிடம் வைக்கவும்.

இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.

உடலுக்கு தெம்பு வேணுமா கம்பு சாப்பிடுங்க! | Talkypix

🥋🥋🥋🥋🥋🥋

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

🥋🥋🥋🥋🥋🥋

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

2 comments:

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...