Wednesday, February 18, 2026

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.


உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்பேட்டையில் 13 மாணவிகளுக்கு ஸ்ரீ ராஜ திவ்யபாரதி சமூக அறக்கட்டளை சார்பாக திருக்குறள் முறை விருது வழங்கப்பட்டது. 

உலகப் பொதுமறை நூலான திருக்குறளில், எம் பள்ளி 13 மாணவிகள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கதை  எழுதினார்கள். இதன் மூலம்  மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனை திறன் மேம்படுத்தம் விதமாக இந்நிகழ்வு இருந்தது. மாணவர்கள் எழுதிய திருக்குறள் கதை அறமே வரம் என்ற தொகுப்பு நூலில் வெளிவந்துள்ளது. இவர்களின் திறமையைப் பாராட்டி திருக்குறள் முகை விருதிற்கான சான்றிதழ், கேடயம் மற்றும் மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இக்கால மாணவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் எழுதிய நூலில் உள்ள சிறப்பு அதில் உள்ள வாழ்வியல் கருத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தன் காரணமாக இந்நிகழ்வு அமைந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் வழிகாட்டியாகவும், கதை எழுத பயிற்சி அளித்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் அவர்கள் இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளார். உடன்  சுப்ரமணியன், ஆனந்தம் ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.


இன்று (18.02.2026) கலைத் திருவிழாவில் மாநில அளவில் (களிமண் சுதை வேலைப்பாடு) மூன்றாம் இடம் பிடித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,   த.பாதர்பேட்டையில் எட்டாம் வகுப்பு பயிலும் வே. தரணீஷ்  என்ற மாணவனுக்கு உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் ஐயா மற்றும் உயர்திரு.முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அம்மா அவர்களால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு 🙏🙏🙏

No comments:

Post a Comment

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

  😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026. 2026 Celestial Events and European Travel Safety Guid...