✍🏻 இயற்கை வாழ்வியல் முறை 🍇திராட்சையின் நன்மைகள்
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.
🍇🍇🍇🍇🍇🍇
பொதுவாக திராட்சை பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோயையும் மற்ற பிற புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டது.
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன. இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாத்து நலமாக வாழலாம்.
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும் பணியை செய்யும்.
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சை பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" அமிலம் நமது மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சையில் வைட்டமின் சக்தி
திராட்சை பழங்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை அதிகம் கொண்டது. மேலும் கால்சியம், ரைபோபிளவின், மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிகம் கொண்டவையாகும். இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்புகள், பற்கள் போன்றவற்றின் உறுதித்தன்மைக்கும், ரத்தக்காயம் ஏற்படும் போது ரத்தம் வேகமாக குறையவும் உதவுகிறது.
🍇🍇🍇🍇🍇🍇
சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
🍇🍇🍇🍇🍇🍇
நாம் உண்ணும் சில வகை உணவுகளிலும் மற்றும் எண்ணெய்களிலும் கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது.
🍇🍇🍇🍇🍇🍇
முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். கண்களின் கருவிழிகளின் செல்வளர்ச்சி தன்மையை திராட்சைபழம் அதிகரிக்கும் சக்தி கொண்டதால் கண்பார்வை தெளிவாகும். மேலும் கண்புரை, கண்ணழுத்த நோய்களையும் போக்குகிறது.
🍇🍇🍇🍇🍇🍇
உடல் மற்றும் சோர்வடையும் பொதும், பதற்றமடையும் போதும் உடல் நலத்தை பாதிக்கும் சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றன. திராட்சைப்பழங்களில் இந்த தீய ரசாயனத்தை கட்டுப்படுத்தி உடல் மற்றும் மனதிற்கு சிறந்த நிவாரணமாக இருந்து, மனஅழுத்தத்தை போக்குகிறது.
🍇🍇🍇🍇🍇🍇
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். திராட்சைப்பழங்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. இவர்கள் இந்த திராட்சைப்பழங்கள் சிலவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
🍇🍇🍇🍇🍇🍇
தலைவலி அனைவரையுமே மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் ஒரு பாதிப்பாகும். அதிலும் ஒற்றை தலைவலி ஏற்படும் போது தலையில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் இருக்கும். இந்த ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படும் சமயம் சில திராட்சை பழங்களை நன்கு மென்று சாப்பிட ஒற்றை தலைவலி குறையும்
🍇🍇🍇🍇🍇🍇
திராட்சையில் சக்தி வாய்ந்த ரெஸ்வெராட்ரோல் எனப்படும் பாலிபினால் இருக்கிறது.இது ரெட் ஒயினிலும் இருக்கும். கர்ப்பிணிகள் திராட்சையை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்றால், உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள்.
🍇🍇🍇🍇🍇🍇
கர்ப்பிணி பெண்கள் திராட்சை பழம் சாப்பிடுவதால் அதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் அமிலத்தால் கருப்பையில் உள்ள குழந்தைக்குப் பிரச்சனை உண்டாக கூடும். ஆகையால் கர்ப்பிணி பெண்கள் திராட்சை சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொள்ள வேண்டும்.
🍇🍇🍇🍇🍇🍇
ஆகவே எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவாக சாப்பிட்டு வளமுடன் வாழ வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிக உள்ள உணவு பொருட்களை மிகவும் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்வதால் எந்த பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
🍇🍇🍇🍇🍇🍇🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🍇🍇🍇🍇🍇🍇
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்
🍇🍇🍇🍇🍇🍇
நன்றி :பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி
(( செல் நம்பர்)) (( 6383487768))
(( வாட்ஸ் அப்)) (( 7598258480 ))
No comments:
Post a Comment