Monday, November 16, 2020

✍️கவிதை ✍️ அன்னை தெரசா - இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

       அன்னை தெரசா  - இரஞ்சிதா தியாகராஜன்.

நீங்கள் ரோஜா பூக்கலோரம் ....

நான் உங்களை பார்த்த அந்த நேரம் .....

அது ஒரு அழகிய புகைப்படம் ....


அழகே.... அதிசய நிலவே.... 


உங்கள் அன்பை பார்த்து.... 

மனதெல்லாம் பனியா வேர்த்து.... 

புதிதாய் குலுங்குகிறேன் உங்கள் மேல் காதல் பூத்து.... 


வெள்ளை ஆடையில் வெண்ணிலாவோ நீங்கள்... 

வெண்மையான உள்ளம் கொண்டவரோ நீங்கள்..... 


அன்பு என்ற சொல் அடியெடுத்து வந்தது...

அசுத்தங்களையும் அழகாக்க கடவுளே வரமாய் தந்தது.... 


கன்னியாக வாழ்ந்த தங்கம் நீங்கள்.... 

ஆனாலும் அன்பினால் அனைவருக்கும் அன்னையாகிநீர்கள்....

😭உங்களை எங்கே கொண்டு போனது மரணம்????? 

சேவை செய்ய அழைக்கிறதோ!!!வானில் தேவர் உலகம். 😭

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

MADRE TERESA - PicMix

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...