Monday, December 28, 2020

ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு- கூடுதல் தளர்வு இல்லை என அறிவிப்பு.

ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு- கூடுதல் தளர்வு இல்லை என அறிவிப்பு.

Ministry of Home Affairs (MHA) extends the earlier guidelines for COVID19  surveillance to remain in force up to 31st January 2021 || தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய

ஊரங்கு இல்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறை படுத்தப்படது. பின்னர், தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால், செப்டம்பர் மாதத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தளர்வால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து படிப்படியாக மாதம்தோறும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், 2021 ஜனவரி 31-ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோன பரவல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன. இதற்கிடையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, இந்தியாவிலும்  ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்ற அச்சம் மக்கம் மத்தியில் நிலவியது. இந்நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதற்கிடையில், தமிழகத்தில்  ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தமிழக சுகாராரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...