Monday, December 21, 2020

✍️கவிதை✍️🌨️💧மழை💧🌨️இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை✍️🌨️💧மழை💧🌨️இரஞ்சிதா தியாகராஜன்.

இன்று இங்கெல்லாம் மழை! சென்னை வானிலை அறிவிப்பு! - Seithipunal

மண்ணும், மனமும் மணக்குதையா.... 

விவசாயம் உன்னால் நன்கு செழிக்குதையா... 

உன் கண்ணீரீல் மக்கள் சிரிக்குதையா.... 


கதிரவன் கண்ணும் வெயிலாக சிவக்குதே!!!   

வறட்சியில் பட்டினியும் தான் பிறக்குதே!!! 


வானில் முழங்குதே இடியோசை உன் வருகையை முரசொலியாக.... 


மக்களும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் ஆவலாக... 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை ! மக்கள் மகிழ்ச்சி

மயிலோ தோகை விரித்தாட, 

மரம், செடிகளும் சேர்ந்து கூத்தாட, 

தென்றலும் அவர்களோடு இசைத்தாட, 

சின்ன குழந்தை தெருவில் விளையாட, 

மழையே!!! நீயோ அவள் கண்ணத்தில் முத்தமிட.... 


ஆஹா!!! எத்தனை அற்புதம்... 

நீதான் நீர்நிலைகளை நிரப்பனும்... 


பட்டப்படிப்பு படித்தவனும், 

பாதம் ஊன்றி சேற்றில் உழைப்பவனும், 


மழையே!!! நீர் இன்றி வாழ இயலா.... 

மழை வருவதை முன்பே அறிய வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய வழி

இதை உணரா மனிதன் மரங்களுக்கு கொடுத்தான் கல்லறை... 

தண்ணீர் பாட்டில்களுக்கு கொடுக்கிறான் சில்லறை.... 


மரம் வளர்ப்போம்... 

மழை பெறுவோம்...

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...