Thursday, January 7, 2021

பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை எனத் தகவல்! -காணொளி.

பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை எனத் தகவல்!-காணொளி.

தமிழகத்தில் கொரோனா காரணமாக 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் 70% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கோரிக்கை வைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தமிழகத்தில் பள்ளி ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்து இருந்தார். அதற்கான தேதி சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறி இருந்தார். இதற்கிடையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஜனவரி 6 மற்றும் இன்று என இரு நாட்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் 70 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரு முறை நடந்த கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொங்கல் பண்டிகை முடிந்து திறக்கலாம் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...