Monday, January 18, 2021

✍🏻🀄🀄இயற்கை வாழ்வியல் முறை🀄🀄வசம்பின் மருத்துவ பயன்.

✍🏻🀄🀄இயற்கை வாழ்வியல் முறை🀄🀄வசம்பின் மருத்துவ பயன்.

வசம்பு மருத்துவ பயன்கள | Vasambu Home Remedies in Tamil - YouTube

🀄🀄🀄🀄🀄🀄

வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது "பிள்ளை வளர்ப்பான்" என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள்.

🀄🀄🀄🀄🀄🀄

இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர்.

🀄🀄🀄🀄🀄🀄

வசம்பை கடிப்பதால் பிறந்த குழந்தைகள் தங்கள் கையில் கட்டப்பட்டுள்ள வசம்பை கடிப்பதால் அதன் மருத்துவ சத்துக்கள் உள்ளே நுழைந்து வயிற்று பிரச்சினைகளை விரைவில் களைகிறது. குழந்தைகள் பொதுவாக தங்களுடைய கையில் கிடப்பதை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். மண்ணெல்லாம் வயிற்றுக்குள் போகும். இந்த வசம்பை சப்பிக் கொண்டிருந்தால் உடலில் உள்ள கழிவுகள் முற்றிலுமாக வெளியேறி விடும்.

🀄🀄🀄🀄🀄🀄

மருத்துவ நன்மைகளை கொண்ட வசம்பு! | Acoruscalamus with health benefits! -  Dinakaran

வயிறு வீக்கம்

வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இந்த வயிறு உப்பசம் ஒன்று. பால் ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு வயிறு உப்பசம் அடிக்கடி உண்டாகும்.

🀄🀄🀄🀄🀄🀄

பூச்சு நெருங்காமை

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சுகள் அண்டாது. பெரியவர்கள் படுக்கும் இடத்தில் வசம்பையும் பயன்படுத்தலாம். உலர்ந்த அல்லது பச்சையாக உள்ள புதினா இலைகளையும் சுற்றிலும் தூவி விடலாம்.

🀄🀄🀄🀄🀄🀄

வாய்வு தொல்லை

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். ஒரு சிறு குத்தியில் குத்தி லேசான தீயில் வசம்பை நன்கு கரியாகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பின்னர் குழநதைக்குப் பயன்படுத்தும் எண்ணெயில் குழைத்து வயிற்றுப் பகுதியில் தடவலாம். பெரியவர்களும் கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம். மிகவும் குளிர்ச்சியான உடல் கொண்டவர்களாக இருந்தால் தேங்காய் எண்ணெயும் சூட்டு உடலாக இருந்தால் விளக்கெண்ணெயும் பயன்படுத்துவது நல்லது.

🀄🀄🀄🀄🀄🀄

பால் மட்டும் போதும்

வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும். பொதுவாக குழந்தைகள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்ணும் உணவு செரிப்பதற்கு வெகுநேரம் பிடிக்கும். அதனால் மருந்துகள் கொடுப்பதற்கு முன்னால் வயிறு முட்ட அவர்களுக்கு பாலோ வேறு உணவோ கொடுக்காமல் அரை வயிறு உணவு கொடுத்தால் போதுமானது.

🀄🀄🀄🀄🀄🀄

இருமல்

வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும். அதிமதுரப் பொடியை பாலில கலந்தும் குடித்து வரலாம். அவ்வாறு குடிக்கும் பொழுது அதிலேயே அதிக அளவிலான இனிப்பு இருப்பதால் தேனோ அல்லது வேறு இனிப்புகளோ பயன்படுத்தத் தேவையில்லை.

🀄🀄🀄🀄🀄🀄

M-Tech Gardens Rare Calamus Sweet flag Vayambu Acorus Calamus Medicinal 1  Healthy Live Plant: Amazon.in: Garden & Outdoors

மூளை வளர்ச்சி

இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

🀄🀄🀄🀄🀄🀄

வயிற்று போக்கு

வசம்பு, காயம், அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்.

🀄🀄🀄🀄🀄🀄

பசி அதிகமாக வசம்பைச் சுட்டு பொடியக்கி 1/4 கிராம் அளவு தேனில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் சாப்பிட்டு வர வேண்டும்.

🀄🀄🀄🀄🀄🀄

வாந்தியுணர்வு கட்டுப்பட வசம்பு  சுட்ட சாம்பலை தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும்

🀄🀄🀄🀄🀄🀄

வசம்பின் வேர் முண்டுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்ப் பொருள் நரம்புகளுக்குக் கிளர்ச்சியூட்டி, அவற்றைத் தூண்டக்கூடியதாகும்.

🀄🀄🀄🀄🀄🀄

மனதையும், உடல் உறுப்புகளையும் அமைதிப்படுத்தும் மருந்தாகவும், வலி நீக்கியாகவும் இந்த எண்ணெய் பயன்படுகின்றது.

🀄🀄🀄🀄🀄🀄

வேர் முண்டுகளின் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

🀄🀄🀄🀄🀄🀄

வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்

🀄🀄🀄🀄🀄🀄

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

 🀄🀄🀄🀄🀄🀄

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.

🀄🀄🀄🀄🀄🀄

பின்குறிப்பு

எச்சரிக்கை: வசம்பை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான வாந்தியையும், வயிற்றுக்குமட்டலையும் தூண்டும்.

🀄🀄🀄🀄🀄🀄

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞 💞💞💞💞

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர்  6383487768

 வாட்ஸ் அப் எண்  7598258480 

🀄🀄🀄🀄🀄🀄

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...