Wednesday, January 13, 2021

✍🏻 🔥🔥இயற்கை வாழ்வியல் முறை🔥🔥தைத்திருநாள் கட்டுரை.

 ✍🏻 🔥🔥இயற்கை வாழ்வியல் முறை🔥🔥தைத்திருநாள் கட்டுரை.

தைத்திருநாள் hashtag on Twitter

🔥🔥🔥🔥🔥🔥

எந்த செயலையும் ஆண்டவனை வணங்கி நல்ல நாள் பார்த்து, நட்சத்திரம், நேரம் குறித்து அதன்படியே, அந்த நாள், அந்த நேரம், அந்த செயலை ஆரம்பித்தால் வெற்றி கிட்டும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை உடையவர்கள் நம் மக்கள். அதன்படி, ஆண்டின், 12 மாதங்களில், தை மாதம், நல்ல செயலை ஆரம்பித்தால், அது நல்ல பயனை நமக்கு அளிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டுள்ளோம்.

🔥🔥🔥🔥🔥🔥

வருடா வருடம் மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில் நிறைய விசேஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆயினும் இவற்றில் எல்லாம் முதன்மை பெறும் ஒரு சிறப்பு மிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை தான். கதிரவன் தனது வெப்ப சேவையில் உச்சத்தைப் பெறும் முதல் ஆறு மாதங்கள், 'உத்தராயணம்' என்றும், சாந்தத்தைப் பெறும் அடுத்த ஆறு மாதங்கள், 'தட்சிணாயணம்' என்றும் அழைக்கப்படுகின்றன.

🔥🔥🔥🔥🔥🔥

உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை, உக்கிரம் வடக்கு நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும் என்றும் கோளியல் அறிஞர்கள் சொல்வதுண்டு. அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும் தட்சிணாயணம் முடியும் நாளும், பொங்கல் பண்டிகையே ஆகும் ஆறு மாதங்களாய் நிலவி வந்த நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தை முதல்நாள். இது, நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் அதற்கு ரணமான சூரியனுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றி நவிலலும்தான்.

உழவர் திருநாளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் - என்னெஸ்லி - நமது மலையகம்

🔥🔥🔥🔥🔥🔥

அதனாலேயே இந்த நாளை தேசிய பொங்கல் தினம் என்று கூறுகின்றனர். உழவர் திருநாளாம் தைத்திருநாள், உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்பட்டுகிறது. பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாகக் கொண்டாடப்படும் ஒரு உண்மையான விழா; உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

🔥🔥🔥🔥🔥🔥

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் நாளை மலர்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுகின்றனர். உழவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல், உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.🔥🔥🔥🔥🔥🔥

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

🔥🔥🔥🔥🔥🔥

இதுவே, நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது என்ற வரலாற்று கதை, அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது.

🔥🔥🔥🔥🔥🔥

போகியின்போது பழைய பொருட்களை எரிப்பது ஏன்...?

போகி - பழையன களைதல்

போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், 'பழையன கழித்து புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

🔥🔥🔥🔥🔥🔥

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாககருதப்படுகிறது. அன்று வீட்டின் கூரையில், பூலாப்பூ என்கிற மலரை சொருகி வைப்பர். போன ஆண்டு போல், 'டிவி' முன்பும், வாட்ஸ் ஆப், முகநுால் என்றும் இருந்த நம் நேரத்தை இந்த முறை களைந்து கழித்துவிட்டு, புத்தம் புதிதாய் அனைவருக்கும் போனில் வாழ்த்துவோம்.

🔥🔥🔥🔥🔥🔥

அருகில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துவோம். உறவுகளை மேம்படுத்தி, உயிரற்ற பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தீயிட்டு கொளுத்தி விடுவோம். அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள். அதனால் இன்று மகிழ்வோடு போளி, வடை, பாயசம் சமைத்து சாமிக்கு என்று நெய்வேத்யம் செய்து சாப்பிடுவோம்

🔥🔥🔥🔥🔥🔥

🌞 தைப்பொங்கல் GIFs h - ShareChat - India's own Indian Social Network

தைப்பொங்கல் - புதியன புகுதல்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே, தை மாதம் ஆகும். பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும், மாட்டுக்கும் படைக்க வேண்டும்.

🔥🔥🔥🔥🔥🔥

பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

🔥🔥🔥🔥🔥🔥

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த்தேக்கத்தால் ஒரு வேளாண்மை தான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும்.

🔥🔥🔥🔥🔥🔥

செந்நெல் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து, பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்

🔥🔥🔥🔥🔥🔥

பஞ்ச பூதங்களும் பொங்கலும்:

Best Pongal GIFs | Gfycat

பொங்கல் திருவிழாவை பஞ்சபூத வழிபாட்டுக்குரிய நாளாக கொள்ளலாம். நிலம்,நீர்,நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் தற்போதுவரை கிராமங்களில் மண்பானையிலேயே பொங்கலிடுகிஇந்தப் பானை முதலில் பூமியிலிருந்து களிமண்ணால் செய்யப்படுகிறது. பானையில் நீர்விட்டு பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசியைக்கொதிக்க வைக்கிறோம்.நெருப்பு எரிவதற்கு காரணமாக் காற்று இருக்கிறது.வெட்ட வெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண்டலத்துக்கு நன்மையை செய்கிறது இதன்படி பஞ்ச பூதங்களை வழிபடும் பண்டிகையாய் பொங்கல் அமைந்துள்ளது

🔥🔥🔥🔥🔥🔥

தேசிய விழாவாய் நம் பொங்கல் விழா

ஜல்லிக்கட்டு - டவுசரை கழட்டிய காளை... Jallikattu - Trouser Removed By Bull  GIF | Gfycat

பொங்கல் விழாவை தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிர்ப்பதும் வழக்கமாய் உள்ளது.

🔥🔥🔥🔥🔥🔥

தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.

🔥🔥🔥🔥🔥🔥

பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன. நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குகிறது, அதைச் சார்ந்த மற்ற தொழில்களும் சிறந்து விளங்குகின்றன, நமது குடும்பங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஆநிரைச் செல்வங்கள் நிறைந்திருக்கிறன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இனி நாமும் நம் முன்னோர்கள் வழிபட்ட முறைகளை பின்பற்றி வழிபட முயற்சிப்போம்

🔥🔥🔥🔥🔥🔥

பழையன கழிதலும்

புதியன புகுதலும் நலமேயாம்*

வாழையடி வாழையாய் வந்த

நல்லதோர் முதுமொழியாம்

தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்

விடியும் வேளை நாமெழுந்து நீராடி

நற்காலைப் பொழுதினிலே

பொங்கல் விழா தனிப்பெருந்

திருவிழாக்கோலம் பூணுகிறது.

தைப்பொங்கல் திருவிழா என்பது

ஒரு சமய விழா அல்ல!

தமிழரின் பண்பாட்டு விழா!

தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு

கொண்டாடும் நாள்!

அனைவருக்கும் இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🏻

🙏 பொங்கல் வாழ்த்து GIFs 🙏S💖P🌹K🙏 உன்னை நேசிக்கிறேன் - ShareChat -  India's own Indian Social Network

🌷🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

12 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

12  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedback...