போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் உண்மை பொருள் என்ன ? தெரிந்த கொள்ளுங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள், கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .
அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் !
1) "போகி பண்டிகை "
கெட்ட எண்ணங்களால் பாழாகிப் போன நம்முடைய மனதை போக்கிவிட்டு, புது மனிதனாக தை முதல் நாளில் அவதாரமெடுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே போகி கொண்டாடப்படுவதன் தாத்பர்யமாகும். இதன் காரணமாகவே இதற்கு போக்கி என்ற பெயர் உண்டானது
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை, இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .
2) "சூரியன் பண்டிகை "
தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும். புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும், சூரிய கலையாகவும், சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது. இப்படி பிரிந்து ஓடுகின்ற சூரிய மற்றும் சந்திர கலையை சுழி முனையில் ஒரு கலையில் செலுத்தினால், அந்த மனிதன் மரணம் தவிர்த்து கடவுளை அடைய முடியும் என்பது சித்தர் கண்ட மார்க்கம்.
"சங்கி ரண்டு தாரை ஓன்று
சன்னல் பின்னல் ஆகையால் மங்கி மாளுதே உலகில் மானிடர்கள் எத்தனை
சங்கி இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் கொங்கி பங்கி மங்கையரோடு கூடி வாழலாகுமே ".
என்று கலைகளின் இயக்கத்தை மாற்றி சுழிமுனையில் செலுத்த வேண்டும் அப்படி செலுத்தினால் கடவுளோடு சேர்ந்து வாழலாம் என்று மேற்கண்ட சித்தர் பாடல் கூறுகிறது .
ஆதலால் சூரிய சந்திர கலைகளை நினைவு படுத்தவே சூரியன் பண்டிகையாக வைக்கப்பட்டது .
3) "மாட்டு பொங்கல் "
விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.
மாட்டு பொங்கல் என்பது, நம் தமிழர்களின் சடங்குகளில் பசு மாட்டை தான் நாம் பெரும்பாலும் வழிபாடு செய்வோம். பசு என்பது சித்தர்களின் பரிபாஷையில் ஆன்மா என்று பொருள். அதனால் தான் புது வீடு குடி போகும்போது பசுவை வீட்டினுள் நிறுத்தும் பழக்கம் நம்மிடையே இருக்கிறதின் பொருள் அதான், அதாவது வீடு என்ற இந்த உடம்பில் பசு என்ற ஆன்மாவை நிறுத்தி வைக்க வேண்டும். உடம்பை விட்டு ஆன்மா பிரியாமல் கடவுளை சேரனும் என்று காட்டவே அந்த பழக்கம் ஏற்படுத்தப்பட்டது, பொருள் தெரியாமல் 5 அறிவு உள்ளு பசுமாட்டை வீட்டினுள் நிறுத்தி வருகிறோம். பசு என்ற ஆன்ம தன்மையை அடையவேண்டும் என்று நினைவுபடுத்தவே மாட்டு பொங்கல் பண்டிகை. அதாவது போகத்தை ஒழித்து, சூரிய சந்திர கலையை மாற்றினால் பசு என்ற ஆண்மை தன்மையை பெற்று விட முடியும் என்பதை காட்டவே இந்த மாட்டு பொங்கல் பண்டிகை .
4) "காணும் பொங்கல் "
காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
வரப்புயர நீருயரும்! நீருயர நெல்லுயரும்! நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.
"தை பிறந்தால் வழி பிறக்கும் "
இந்த பண்டிகை தை மாதம் கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால் தை என்றால் புருவ மத்தி என்று பொருள். அதாவது நம் உயிர் நம் உடம்பை விட்டு செலும்போது உடம்பில் ஒன்பது துவாரம் வழியாக சென்றால் அது மரணம் பத்தவது வாசல் என்று சொல்ல கூடிய நெற்றி கண் வழியே சென்றால் அது மரணமற்ற (சமாதி நிலை, முக்தி) ஒரு நிலை அதற்கு, போகத்தை நீக்கி, கலை ரகசியம் தெரிந்து அதனை நெறி படுத்தினால் அந்த உயிர் பத்தாவது வாசல் வழியாக செல்லும் ,அப்படி நிலை பிறந்தால் அது நமக்கு கடவுள் உலகத்திற்கு வழி கிடைக்கும் பிறக்கும் என்று பொருளில் சொல்லப்பட்டது .
மேற்கண்ட யோக முறைக்கு உணவாக எடுக்க வேண்டுயதுதான், பாசி பருப்பு பொங்கல் உணவு, ஆதலால்தான் பொங்கலுக்கு அந்த வகையான உணவை நாம் சமைக்கிறோம். தெரியாததின் விளைவு எப்படி இப்போது பொங்கல் கொண்டாட்டம் இருக்கறது என்று நமகெல்லாம் தெரிந்த விஷயமே. .
பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டு பொங்கல் !
நிரந்தரமாக தங்கட்டும்
நிம்மதி சந்தோஷம் நம் அனைவரின் வீட்டில்!
பொங்கலோ பொங்கல் !!!
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment